முந்தய பக்கம்

விமானத்தில் பயணம் செய்த தென்னடார் அரசுப் பள்ளி மாணவர்கள்

29 May 2026, 8:42 pm
விமானத்தில் பயணம் செய்த தென்னடார் அரசுப் பள்ளி மாணவர்கள்
<p><strong>விமானத்தில் பயணம் செய்த தென்னடார் அரசுப் பள்ளி மாணவர்கள்</strong></p><p>​​​​​​​நாகப்பட்டினம், மே 29 - 2025-2026ஆம் கல்வியாண்டில் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற, தென்னடார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மு.பிரகதி, க.ரமணன், செ.மகிந்தா, இ.வீரஇலமகன் ஆகிய நான்கு மாணவர்களை பாராட்டும் வகையில் திருச்சி முதல் சென்னை வரை விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கான பயண ஏற்பாட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் த.சு.பாஸ்கரன், தன் சொந்த ஏற்பாட்டில் செய்திருந்தார். மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்ததோடு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விமான பயணம் ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியரையும் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும் விமானத்தின் ஊழியர்களும், விமானத்தில் பயணம் செய்தவர்களும் வெகுவாக பாராட்டினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram