கந்துவட்டி கொடுமை பெண்களுக்கு மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் புகார்
15 Jun 2026, 10:58 pm
<p><strong>கந்துவட்டி கொடுமை பெண்களுக்கு மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் புகார்</strong></p><p>தேனி, ஜூன் 15- சின்னமனூர் பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப் படும் பெண்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாரீஸ்வரி, தீபா, முத்துலட்சுமி, ஜெயா, இந்துராணி உள்ளிட்ட பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சின்னமனூர் பகுதியில் வசிக்கும் சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத் தேவைகளுக்காக “நாச்சியார் அறக்கட் டளை” என்ற நிறுவனத்தில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றுள்ள னர். கடன் மற்றும் வட்டி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலை யில், அறக்கட்டளை நிர்வாகிகளாக கூறப் படும் சிங்கராஜ், சௌந்திரபாண்டி, முத்து லட்சுமி உள்ளிட்டோர் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட் டல் விடுத்தும் வருவதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது. மேலும், நேரடியாகவும் செல்பேசி மூல மாகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக வும், இதனால் சில பெண்கள் தற்கொலை க்கு முயற்சிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடன் தொகையை திருப்பிச் செலுத்தத் தயாராக இருந்த போதிலும், கூடுதல் வட்டி கேட்டு நிரப்பப்படாத காசோலைகளில் அதிக தொகையை எழுதி வசூல் செய்வ தாக மிரட்டப்படுவதாகவும் புகாரில் கூறப் பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெண்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.</p>
