தேனி விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்
10 Oct 2026, 1:25 am
<p><strong>தேனி விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்</strong></p><p>தேனி, அக். 9-தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கிப்பயிலும் பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த் விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும்மொத்தம் 81 மாணவர்களில், 24 மாணவர்கள் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 57 மாணவர்கள் தேனி-அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றுவருகின்றனர். மாணவர்களின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், காலை 8.30 மணிக்கு விடுதியிலிருந்து பள்ளிக்கும், மாலை4.30 மணிக்கு பள்ளியிலிருந்து விடுதிக்கும் இப்பேருந்து இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் குறித்த நேரத்தில் கல்விபயில்வதோடு, தங்களது விளையாட்டுப் பயிற்சியையும் தடையின்றித் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகதுணை மேலாளர் ஜெகதீசன், கிளை மேலாளர் பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.</p>
