தேனியில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
9 May 2026, 9:19 pm
<p><strong>தேனியில் தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு</strong> </p><p> தேனி, மே 9- தேனி ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலை யில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி வட்டம்) 47 பள்ளிகளில் உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களைக் கூட்டாய்வு செய்யும் பணிகள் சனிக்கிழமை நடை பெற்றது. இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவ சர கால வழி, முதலுதவிப்பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டு கள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை, கண்காணிப்புக் கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைபேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும், வேக கட்டுப்பாட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், முதன்மைக் கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
