நகையை மீட்கச் சென்ற கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதாக புகார் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
3 Jun 2026, 10:06 pm
<p><strong>நகையை மீட்கச் சென்ற கூலித்தொழிலாளி தாக்கப்பட்டதாக புகார் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு</strong></p><p>கடமலைக்குண்டு, ஜூன் 3- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நகையை மீட்கச் சென்ற கூலித் தொழிலாளி தாக்கப்பட்டதாக அளிக்கப் பட்ட புகாரின் பேரில், மூவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். கருமலைசாஸ்தாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியகருப்பன் (28), கூலித் தொழிலாளி. திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு பசும்பொன் நகரில் செயல்பட்டு வரும் பெருமாளின் நகை அடகுக் கடையில் ஒரு கிராம் நகையை அட மானம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அடகு வைத்த நகை ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை பெரியகருப்பன் தனது நகையை மீட்பதற்காக அந்தக் கடைக்குச் சென்றுள் ளார். அப்போது, பழைய கடன் பாக்கி இருப்பதாகவும், அதனை செலுத்தினால் தான் நகையை வழங்க முடியும் என்றும் கடை உரிமையாளர் பெருமாள் தெரிவித்த தாக கூறப்படுகிறது. அதற்கு, சம்பந்தப்பட்ட கடனை ஏற்கனவே முழுமையாக செலுத்தி விட்டதாக பெரியகருப்பன் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெருமாள் மற்றும் அவரது உறவினர்களான சென்றாயம்மாள், ஈஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பெரிய கருப்பனை சாதிப் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், பெருமாள் முகம் மற்றும் வாயில் சரமாரியாக குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பெரியகருப்பன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரியகருப்பன் அளித்த புகாரின் பேரில், கடமலைக்குண்டு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தீபக், பெரு மாள், சென்றாயம்மாள் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டுள்ளார். தலைமறை வாக உள்ள மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.</p>
