தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி தேனியில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

yesterday
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி தேனியில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி தேனியில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 22- குறைந்தபட்ச ஓய்வூதிய மாக ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு சத்து ணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தேனியில் முதலமைச்சர் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், அரசு ஓய்வூ தியதாரர்களுக்கு வழங் கப்படுவது போன்று அக விலைப்படி, மருத்துவப்படி மற்றும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களு க்கும் பொதுநல வைப்பு நிதி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், 10:20:30 விகிதத்தில் ஓய்வூ திய உயர்வு வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் தேனி மாவட்டத் தலைவர் சி.நிலவழகன் தலைமை வகித்தார்.

அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.துரைராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜானகி கோரிக்கை களை விளக்கிப் பேசினார்.

அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் முத்துக் குமார், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சிவமணி, மின் ஊழியர் ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில துணைத் தலைவர் சந்திரசேகர், போக்கு வரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு உரையாற்றினர்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஓய்வூதி யர் சங்க மாநிலத் தலை வர் பா.ராமமூர்த்தி நிறை வுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ஜெயபாண்டி நன்றி கூறி னார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.