சிறுமி பாலியல் வழக்கில் பெற்றோர் அலைக்கழிப்பு தேனி அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் மீது புகார்
5 Oct 2026, 9:16 pm

சிறுமி பாலியல் வழக்கில் பெற்றோர் அலைக்கழிப்பு தேனி அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் மீது புகார்

தேனி, அக்.5-தேனியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை அலைக்கழித்ததுடன், “மேல் நடவடிக்கை தேவையில்லை” என எழுதி வாங்கியதாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.தேனி நகரில் கடந்த அக்.3 ஆம் தேதி 9 வயது சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், தேனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார்மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து, சிறுமியின் பெற்றோரை உரிய ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

வழக்கை மூடிமறைக்க முயற்சி?

ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் காவல்நிலையத்துக் குச் சென்ற சிறுமியின் பெற்றோரிடம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராணி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, “இந்த வழக்கு முடிவுக்கு வர 20 ஆண்டுகள் ஆகும். நாளிதழ்கள் மற்றும் தொலைக் காட்சிகளில் செய்தி வெளியானால் சிறுமியின் எதிர்காலம் பாதிக்கப் படும். எனவே, மேல் நடவடிக்கை தேவையில்லை என எழுதித் தாருங் கள்” என்று அவர் கூறியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நம்பிய பெற்றோர், அதுபோல எழுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கி

ருந்த காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி, “நாளை ஆய்வாளர் வந்துவிடுவார்; பார்த்துக் கொள்ளலாம்” எனக் கூறி அவர்களை அனுப்பியதாகவும் தெரிகிறது.இதனால் செய்வதறியாது தவித்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தங்களது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளனர்.

ஐஜி தலையீட்டையடுத்து விசாரணை

இதையடுத்து, அந்த உறவினர் தன்னிடம் இருந்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அந்த எண், முன்னாள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், தற்போது திருச்சி மண்டல காவல் துணைத் தலைவர் (ஐஜி) ஆகப் பணியாற்றி வருபவருமான பாலகிருஷ்ணனுடையது.

புகாரைப் பார்த்த ஐஜி பாலகிருஷ்ணன், உடனடியாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவனை விசாரணை அதிகாரியாக நியமித்து தேனி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன்பேரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை வரவழைத்து ஏடிஎஸ்பி கலைக்கதிரவன் விசாரணை நடத்தினார். சம்பவத்தன்று பணியில் இருந்த பெண் காவல் அதிகாரிகளிடமும் விளக் கம் கேட்டு விசாரணை மேற்கொள் ளப்பட்டது.தொடர்ந்து, தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுவனைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரி

விக்கப்பட்டுள்ளது.கடுமையான நடவடிக்கை தேவை

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள் ளன.இந்நிலையில், அவற்றைப் பின்பற்றாமல் மெத்தனமாகச் செயல்பட்டதுடன், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் வழக்கை முடக்க முயன்றதாகக் கூறப்படும் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளின் செயல்பாடு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, விதிமுறைகளுக்கு மாறாகவும் அலட்சியமாகவும் செயல்பட்ட சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உயர்மட்ட விசாரணை நடத்தி, தவறு உறுதி செய் யப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.