முந்தய பக்கம்

ஊதிய உயர்வு கோரி மனு அளித்த மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள்

yesterday
ஊதிய உயர்வு கோரி மனு அளித்த  மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள்
<p><strong>ஊதிய உயர்வு கோரி மனு அளித்த மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள்</strong></p><p> தேனி, ஜூன் 22- கடந்த 5 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி அல்லல்படு வதாக கூறி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் மனு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ரெபேக்காள், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் ஜி. சண்முகம், மாவட்ட பொருளாளர் எஸ்.வெண்மணி, மக் களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் செல்லப்பாண்டியம்மாள் ஆகியோர் தலைமையில் கடந்த ஆட்சியில் உறுதி செய்யப்பட்டபடி மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். பணி வரன் முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram