தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

3 Oct 2026, 11:30 pm
திருச்சி விரைவு செய்திகள்

செவிலியர் பணியிட விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்

தேனி, அக்.3-தேனி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கத் தவறிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் தங்களிடம் விடுபட்டுள்ள சான்றிதழ்கள் குறித்த விபரங்களை தேனி மாவட்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விடுபட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அக்.4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், அக்.5-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரையும் நேரில் சமர்ப்பிக்கலாம்.சான்றிதழ்களை தேனி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். அக்.5 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் பெறப்படும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக் கப்பட்டுள்ளது.

கம்பத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து

தேனி, அக்.3-கம்பத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்தனர்.தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் 4வது தெருவைச் சேர்ந்த தையல் தொழிலாளி ரம்யா, வெள்ளிக் கிழமை இரவு சினிமா சென்றுவிட்டு நள்ளிரவில் வீட்டிற் குத் திரும்பியபோது, வீட்டின் உள்ளேயிருந்து புகை வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகவீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து கம்பம் மற்றும் உத்தமபாளையம் ஆகிய இரு நிலையங்களிலிருந்தும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த சமையல் எரிவாயு (கேஸ்) சிலிண்டர் அதிக வெப்பத்தால் வெடிக்கும் நிலையில் இருந்ததை உணர்ந்த வீரர்கள், அதனை நுட்பமாகக் கையாண்டு பாதுகாப்பாக வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் குமரேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்விபத்தில் பீரோவில் இருந்த ரூ.50,000 ரொக்கப் பணம் மற்றும் குழந்தைகள் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் மதிப்பிலான நகைகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் பீரோவை உடைத்து திருடிய 2 பேர் கைது

நத்தம், அக்.3-திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே ராக்காச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (34). இவர் நத்தத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் விடுமுறைக் காக வெளியூர் சென்றிருந்த நிலையில், சம்பவத்தன்று மாலை சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த சாகுல் அமீது, பின்னர் கடைக்குச் சென்றார். இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங் கிருந்த 2 பீரோக்களும் உடைக்கப் பட்டிருந்தன. பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பணம் திருடுபோனதாக நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் பொன்குண

சேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அபினேஷ், மலைச்சாமி, தலைமை காவலர்கள் கிருபாகரன், அழகராஜா, கணேஷ் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும், வீட்டின் அருகே பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதன் அடிப்படையில் நத்தம்–மதுரை சாலையில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பரளி பேருந்து நிறுத்தம் பகுதியில் சந் தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த ரங்கராஜ் (21), விஜய் (28) என்பது தெரியவந்தது. இருவரும் சாகுல் அமீது வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 46 கிராம் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தாங்கள் திருடிச் சென்ற நகைகள் தங்க நகைகள் அல்ல என்றும், அவற்றை அடகு வைக்கச் சென்றபோது அவை கவரிங் நகைகள் எனத் தெரியவந்ததாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எப்கியூஎல் செயலி நிதி மோசடி ரஞ்சித், உறவினர்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை

மதுரை, அக்.3-மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எப்கியூஎல் மற்றும் விஜி முதலீடுஎன்ற மொபைல் செயலி மூலம் கிரிப்டோ

கரன்சி முதலீடு தொடர்பாக மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய் வரை முதலீடுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெறப்பட்ட புகார் களின் அடிப்படையில், வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் பொருளாதார குற் றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டதாகவும், இதற்கான உத்தரவை காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக் கிய குற்றவாளியாகக் கருதப்படும் மேலூர் அருகே வேப்படப்பு, கட்டயம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரதுமனைவி பிரியா என்ற பிரியதர்ஷினி ஆகியோர் திண் டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், வழக்கு தொடர்பாக மேலூர் அருகே கட்டயம்பட்டியில் உள்ள ரஞ்சித் மற்றும் அவரதுஉறவினர்களான கல்லணை, சிவக்குமார், ராஜலட்சுமி, பஞ்சு, பழையூர்பட்டியைச் சேர்ந்த குமார் ஆகியோரின்வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கமர்னிஷா, ஜெயக்கொடி, அன்னபாலா, மலர்விழி, பிரதீப் ஆகியோர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடனும், காவல்துறை பாதுகாப்புடனும் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள், நகைகள், செல் போன்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘அரசு உத்தரவை மீறி சாலை வழிகாட்டிப் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டதா?’

சிவகங்கை, அக்.3-சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கார்த்தி ப. சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்திருப்பது மொத்த வர்த்தகம் குறைந்திருப்பதையும், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதையும் காட்டுகிறது. இருப்பினும், ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமே தமிழக அரசின் வருவாய் அல்ல; பிற வருவாய்களும் உள்ளன.தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் ஒரு கட்சி வெளியேறிய நிலையில், மற்றொரு கட்சி இணைந்துள்ளது. இன்றைய கூட்டத்தில் தவெக பங்கேற்க இருப்பதை வரவேற்கிறேன்.18 வயது நிறைவடைந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண் டிய தேர்தல் ஆணையம், தகுதியான வாக்காளர்களை நீக்குவதில் கவனம் செலுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.சாலை வழிகாட்டிப் பெயர் பலகைகளில் இந்தியில் பெயர்கள் குறிப்பிடப்படுவது, வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அடையாளக் குழப்பத்தை ஏற்படுத்தும். வழிகாட்டிப் பெயர் பலகைகள் பயணிகளுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். இரண்டு பேரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யும் அளவுக்கு, அரசு உத்தரவை மீறி சாலை வழிகாட்டிப் பலகைகளில் இந்தியில் எழுதப்பட்டதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கூகுள் மேப்பை பயன்படுத்திச்செல்வதால், வழிகாட்டிப் பலகைகளின் தேவை குறைந்துள்ளது என்றும் கூறினார்.அரசியல் மேடைகளிலும், சட்டப்பேரவையிலும் உருவ கேலி, நக்கல், நையாண்டி ஆகியவை ஏற்கெனவே நடைபெற் றுள்ளன. இருப்பினும், உருவ கேலியைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர்கூறினார்.

அரசு சமூகநீதி விடுதிகளில் 37 துப்புரவு பணியாளர்கள் நீக்கம்?மீண்டும் பணி வழங்க கோரிக்கை

தேனி, அக்.3-தேனி மாவட்டத்தில் உள்ள அரசு சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளில் பணியாற்றி வரும் 37 துப்புரவு பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஒப்பந்தஅடிப்படையில் பணியாளர்களை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண் டும் என துப்புரவு பணியாளர் கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆட்சிக் காலத்தில் தேனி மாவட்ட ஊரக வாழ்வா

தார இயக்கத்தின் ந.க.எண்.

402/2022/மதி-6, நாள் 18.2.2025 மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் பார்வைக் கடித எண்.25960/2024/ஆதி.2, நாள் 17.02.2025 ஆகியவற்றின்அடிப்படையில் 37 பேர் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர் விடுதிகளில் துப்புரவு பணியாளர் களாக நியமிக்கப்பட்டோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.இந்நிலையில், எங்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிதாக வேறு நபர்களை ஒப் பந்த அடிப்படையில் நியமிக்கஉள்ளதாகத் தெரிய வருகிறது. ஏற்கெனவே பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில், அரசு சார்ந்த பணி என்பதால் குறைந்த ஊதியமாக இருந்தாலும் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளாக பணியைச் சிறப்பாக செய்து வருகிறோம்.

மேலும், சில விடுதிகளில் சமையலர் பற்றாக்குறை ஏற் படும் நேரங்களில் சமையல் பணிகளையும் செய்து வருகிறோம். எனவே, காலியிடங் கள் இல்லாத நிலையில் எங் களை நீக்கிவிட்டு புதிதாக பணியாளர்களை நியமிக்காமல், எங்களது எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து பணியாற்ற பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.மேலும், கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ள அவர் கள், நிலுவையில் உள்ள சம்பளத்தையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.