திருநெல்வேலி விரைவு செய்திகள்
19 Jun 2026, 9:57 pm

ஜூன் 26 தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் தேனி ஆட்சியர் தகவல்

தேனி ,ஜூன்.19- போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில் “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” Anti-Drug Run 2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேனி மாவட்டப் பிரிவு சார்பாக “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” Anti-Drug Run 2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26 அன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கப்படவுள்ளது. இவ்விழிப்புணர்வு ஓட்டமானது சுமார் 5 கி.மீ தூர ஓட்டத்தில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், NCC, NSS, Nyks விளையாட்டு வீரர்கள் (ம) வீராங்கனைகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைவருக்கும் T-Shirt மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இதுதொடர்பான தேனி மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7401703505 மற்றும் 04546-253090 என்ற தொலைப்பேசி எண்களில் (வேலை நேரங்களில்) தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

காந்தி மியூசியம் பெயர் மாற்ற வழக்கு தள்ளுபடி!

மதுரை, ஜூன் 19 - காந்தி மியூசியத்தை மீண்டும் ‘ராணி மங்கம்மாள் அரண்மனை’ என அழைக்க உத்தரவிடக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், 1955-இல் தமுக்கம் பகுதியில் உள்ள 13 ஏக்கர் நிலமும், ராணி மங்கம்மாள் அரண்மனையும் காந்தி ஸ்மாரக் நிதிக்கு வழங்கப்பட்டு, தற்போது மியூசியமாகப் பராமரிக்கப்படுவதால் பழைய பெயரையே வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, மனுதாரர் கோரும் நிவாரணத்திற்குப் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி? அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜூன் 19 - தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி மற்றும் சமூக விவரங்களைக் கட்டாயமாகச் சேகரிப்பதைத் தடை செய்யக் கோரி, விருதுநகரைச் சேர்ந்த விக்ரமன் பொதுநல மனு தாக்கல் செய்தார். இவ்வாறு சாதி விவரங்களைக் கேட்பதன் மூலம் பாகுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், பாகுபாடற்ற சூழலை உறுதி செய்ய ஒழுங்குமுறைகளை வகுக்க வேண்டும் என அவர் வலியறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி விவரங்களைக் கட்டாயமாகப் பெறக் கூடாது என ஏதேனும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

தேனி,ஜுன்.19- பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மதுரை சாலையில் உள்ள மேரிமாதா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கமலக்கண்ணன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 28 ம் தேதி 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் இவரை கைது செய்தனர். இது குறித்த விசாரணை போக்சோ தேனி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞராக ரக்சிதா ஆஜரானார். விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.எழில், 3ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.