தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் வனப்பகுதியில் பதுங்கல் மீதமுள்ள 4 பேரைப் பிடிக்க இரவு நேரத் தேடுதல்
27 Oct 2026, 10:27 pm
<p><strong>தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் வனப்பகுதியில் பதுங்கல் மீதமுள்ள 4 பேரைப் பிடிக்க இரவு நேரத் தேடுதல் </strong></p><p>ஆண்டிபட்டி, அக்.27-தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் 13 பேர் பிடிபட்ட நிலையில், மீதமுள்ள 4 பேர் அருகிலுள்ள வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.சிறையில் போலீஸாரைத் தாக்கிவிட்டு, திங்களன்று இரவு 17 கைதிகள் தப்பியோடினர். அவர்களில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 4 பேரைத் தேடி அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பாங்கான இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இதற்காக 17 சிறப்புக் குழுக்கள், 5 சிறப்பு அதிரடிப்படைக் குழுக்கள் மற்றும் 4 சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 3 அதிநவீன ட்ரோன் கள் மூலம் தேடுதல் பணி நடைபெறுகிறது. அண்டை மாவட்டங்கள் மற்றும் தமிழக–கேரள எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. இப்பணியில் வனத்துறை, வருவாய்த்துறையினரும் இணைந்துள்ளனர்.இதற்கிடையே, கைதிகள் தப்பிய சம்பவம் தொடர் பாகச் சிறைக் கண்காணிப்புப் பணியில் இருந்த கணபதி, மதன் மோகன் உள்ளிட்ட 9 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
