தேனி சிறையில் தப்பியவர்கள் 17 பேரா, 21 பேரா? கைதி வெளியிட்ட வீடியோவால் தொடரும் குழப்பம்!
1 Nov 2026, 11:42 pm

தேனி சிறையில் தப்பியவர்கள் 17 பேரா, 21 பேரா? கைதி வெளியிட்ட வீடியோவால் தொடரும் குழப்பம்!

தேனி, நவ. 1 –தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளின் எண்ணிக்கை 17 எனச் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், தப்பிய கைதி மீனாட்சிசுந்தரம் வனப்பகுதியிலிருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் 21 பேர் தப்பியதாகக் கூறியிருப்பது கடுமையான குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக். 26 அன்று கைதிகள் தப்பியோடிய சம்பவத்தில், தப்பியவர்களின் எண்ணிக்கையில் எழுந்துள்ள இந்த முரண்பாடு சிறைப் பாதுகாப்பின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. வீடியோவில் பேசியுள்ளமீனாட்சிசுந்தரம், சிறையில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகவும், அதைத் தட்டிக்கேட்டபோது அதிகாரிகள் தாக்கித் துன்புறுத்தியதால் மனித உரிமை மீறலுக்குப் பயந்தே தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்கவுண்டர் அச்சம் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நீதிபதியிடம் சரணடைந்து சிறை முறைகேடுகளை விவரிக்கத் தயார் எனக் கூறி முதல்வரிடம் நீதி கோரியுள்ளார். கைதிகளின் எண்ணிக்கை முரண்பாடு மற்றும் சிறைக்குள் செல்போன் புழக்கம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.