தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்தப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
10 Oct 2026, 9:33 pm

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்தப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

தேனி, அக்.10-தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி, 400-க்கும் மேற் பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்துக் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக அலுவலகத்தைப் பூட்டி முற்றுகையிட்டதால், புதியபணியாளர்களுக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மாத ஊதியமான ரூ.21,570 வழங்குதல், ஊதியத்துடன் கூடிய விடுப்பு, வருங் கால வைப்பு நிதிப் பிடித்தம், பண்டிகைக் கால இரட்டிப்பு ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற் போது மாதம் ரூ.15,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் குற் றம்சாட்டினர்.

கடந்த மாதம் நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்றும், மாறாக 40 புதிய ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், அலுவலகக் கதவைப் பூட்டி நுழைவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் புதிய பணியாளர்களுக்கான நேர் காணல் கைவிடப்பட்டது.

அரசு நிர்ணயித்த ஊதியம் மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட் டம் தொடரும் எனத் தெரிவித்த தொழிலாளர்கள், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.