தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கண்புரை பாதித்த சிறுவனுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

9 May 2026, 9:16 pm
கண்புரை பாதித்த சிறுவனுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

கண்புரை பாதித்த சிறுவனுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை தேனி அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

தேனி, மே 9- இரு கண்களிலும் கண் புரை நோயால் பாதிக்கப் பட்டிருந்த 12 வயது சிறுவ னுக்கு தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முழுமை யான பார்வை மீட்டுக் கொடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தேனியைச் சேர்ந்த மணி கண்டன் (12) என்ற சிறுவன், கண்பார்வை குறைபாடு காரணமாக தனது தாயார் மகாலட்சுமியுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவிற்கு வந்தி ருந்தார்.

சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவ ரது இரு கண்களிலும் “வளர் சிதை கண்புரை” பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, மருத்துவ மனை முதல்வர் முத்து சித்ரா அறிவுறுத்தலின்படி, கண் அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் கணபதி ராஜேஷ் தலைமையில் மருத்துவர்கள் விஜய் ஆண் டனி, சராயு வெங்கட லெஷ்மி, ஜெசிந்தா நான்சி மற்றும் மயக்கவியல் துறை பேராசிரியர் கண்ணன் பாபு தலைமையிலான மருத்து வர்கள் ஜேசுதாஸ், காரு ண்யா உள்ளிட்ட குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர்.

சிறுவனுக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி வலது கண்ணிலும், மே 7 ஆம் தேதி இடது கண்ணிலும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு மணி கண்டன் தற்போது முழுமை யான பார்வையை பெற் றுள்ளார்.

இதுகுறித்து பேராசிரி யர் டாக்டர் கணபதி ராஜேஷ் கூறுகையில், “குழந்தைப் பருவத்தில் ஏற்படும் கண் புரை பாதிப்பு தடுக்கக்கூடிய பார்வை இழப்பிற்கான முக் கிய காரணமாகும்.

ஆரம் பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்” என்றார். மேலும், கண்களில் வெள்ளை பிரதிபலிப்பு, பொருட்களை தெளிவாகப் பார்க்க சிரமம், அடிக்கடி கண் சிமிட்டுதல், தலையை சாய்த்து பார்ப்பது, படிப்பில் கவனக்குறைவு, வெளிச்சத் தில் கண் கூசுதல் அல்லது நீர் வடிதல் போன்ற அறிகுறி கள் இருந்தால் பெற்றோர் உடனடியாக மருத்துவ பரி சோதனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் இத்தகைய கண்புரை பாதிப்புகளுக்கு நவீன முறையில் இலவச அறுவை சிகிச்சை வழங்கப்படுவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.