முந்தய பக்கம்

தேனி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

25 Apr 2026, 5:45 pm
தேனி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் ஆகிய 4 பேர் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த சூழலில், பட்டாசு தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையை சூர்யா மற்றும் தினேஷ் திருந்தபோது, எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சூர்யா மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மற்ற இருவரும் வேகமாக வெளியேறிய நிலையில் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

தகவல் அறிந்த அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram