தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

9 Jul 2026, 9:36 pm
திருச்சி விரைவு செய்திகள்

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தேனி, ஜூலை 9- சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வாலிப ருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆண்டிப்பட்டி அருகே மேக்கிழார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (32). அவர் கடந்த 2023-ம் ஆண்டு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 14 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறியும், கட்டாயப்படுத்தியும் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரி வித்தார். சிறுமியின் தாய் இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. புதன்கிழமை வழக்கு விசாரணையை முடித்து வைத்த நீதிபதி எழில், குரு சாமியை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366-ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறி னால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்ப ளித்தார்.

அலுவலகம் உண்டு; அலுவலர் இல்லை ஆவிச்சிபட்டி கிராமத்தில் அவலம்

நத்தம், ஜூலை 9- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அமைந்துள் ளது ஆவிச்சிபட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் பன்னி யாமலை, நடுவனூர் ஆகிய கிராமங்களும் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆவிச்சிபட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 வருட காலமாக கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாள ரும் தற்போது வரை நியமிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாதிச் சான்றிதழ், வருமானம், இருப்பிடச் சான்றிதழ், சொத்து மதிப்புச் சான்றிதழ், வாரிசுரிமைச் சான்றிதழ், அடங்கல் மற்றும் சிட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை மற்றும் அவசர கையெழுத்து போன்ற தேவைகளுக்கு இரண்டு பேருந்துகள் மாறி குட்டுப்பட்டி வரை அலைந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆவிச்சிபட்டி கிராமத்திற்கு நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை நியமிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

ஆண்டிபட்டி அரசு மகளிர் ஐடிஐயில் ஜுலை 31- வரை நேரடி சேர்க்கை தேனி மாவட்ட ஆட்சியர் தகவல்

தேனி, ஜூலை 9- ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை நேரடி மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வைத்தி நாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில்வதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், ஸ்மார்ட்போன் டெக்னி சியன் மற்றும் ஆப்டெஸ்டர், குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை ரூ.750, விலையில்லா சீருடைகள், காலணிகள், பாடப் புத்தகங்கள், வரைபட உபகரணங்கள், மிதிவண்டி. இலவச பேருந்து வசதி வழங்கப்படுகிறது. மேலும் விப ரங்களுக்கு ஆண்டிபட்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை 9500483620, 9499055770 என்ற கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தை ஆக. 15-க்குள் திறக்க முடியுமா?

கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு மதுரை, ஜூலை 9- மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் அதன் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கக் கோரிய வழக்கில், ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்புள்ளதா என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் கதிர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் பல ஆண்டுகளாக கல்வி, ஆய்வு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் வர லாற்றுப் பாரம்பரிய பாதுகாப்பிற்கான முக்கிய மையமாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைப்புப் பணிகள் காரணமாக அருங்காட்சி யகமும் அதன் நூலகமும் மூடப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தை மீண்டும் திறப்பதாக அதி காரிகள் பலமுறை உறுதியளித்த போதிலும், இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவில்லை. இத னால் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ள தாகவும், எனவே சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் திறக்க உத்தர விட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அமர்வில் வியாழனன்று விசார ணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அருங்காட்சியகத்தை திறக்க வாய்ப்புள்ளதா என்று நீதி பதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தேனியில் வாலிபர் மாயமான வழக்கில் திருப்பம் மகனை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகி உட்பட 2 பேர் கைது

தேனி, ஜூலை 9- தேனியில் வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக மகனை கொலை செய்து துண்டு துண்டாக ஆற்றில் வீசியதாக வாலிபரின் தந்தையும், ஜான்பாண்டியன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியுமான வேந் தர் பாலா உட்பட இருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) என்பவர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் காணாமல் போனதாக அவரது தாய் ராஜ லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், புகார் மனுவை பெற்று விசாரணை செய்த காவல் துறையினர் துப்பு துலக்காமல் விட்டு விட்டனர். பின்னர் மதுரை நீதிமன்றத்தில் ராஜ லட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய் தார். அதன் மீதும் சரிவர விசாரணை நடத்தா மல், தலைமறைவானதாக கூறி தேனி காவல்துறையினர் திசை திருப்பினர். இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது மகன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசா ரணை நடத்த மனு செய்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை மேற்கொள்ள நீதி மன்றம் உத்தரவிட்டது. தேனி சிபிசிஐடி காவல்நிலையத்தில் ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காணாமல் போன ஸ்ரீகாந்தின் தந்தை பாலமுருகன் என்ற வேந்தர் பாலாவிற்கு 3 மனைவிகள் இருப் பது தெரியவந்தது. முதல் தாரத்தின் மகன் ஸ்ரீ காந்த் ஆவர். சொத்து கேட்டு ஏற்பட்ட தகராறில் வேந்தர் பாலா, ஸ்ரீகாந்தை அரிவாளால் தாக்கியது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனை திரும்பப் பெற மகன் மறுத்த நிலையில், தனது நண்பர் கருப்பையா உதவியுடன் ஆட்டோ வாங்கி தருவதாக கூறி, ஸ்ரீகாந்தை வரவழைத்து, மதுவை ஊற்றி கொடுத்து கொலை செய்து, துண்டு துண்டாக முல்லைப் பெரியாற்றில் வீசியது தெரிய வந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் ஆய் வாளர் சுரேஷ், சார்பு ஆய்வாளர் ஜீவா னந்தம் ஆகியோர் வேந்தர் பாலா, கொலைக்கு உதவிய அலெக்ஸ் பாண்டி யன் (25) ஆகியோரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக முல்லைநகரைச் சேர்ந்த கருப்பையாவை தேடி வருகிறார்கள். தனது மகனையே, சொத்துப் பிரச்சனை யில் நண்பர்கள் உதவியுடன் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி முல்லைப் பெரியாற்றில் வீசியது தெரியவந்தது.

கடன் தொல்லை: கம்பத்தில் தம்பதி தற்கொலை முயற்சி மனைவி உயிரிழப்பு; கணவருக்கு தீவிர சிகிச்சை

தேனி, ஜூலை 9- கம்பத்தில் கடன் தொல்லை காரண மாக கணவன் -மனைவி தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கம்பம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் வீரமணி (42). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி காளீஸ்வரி (30) என்ற மனைவியும் 14 வயதில் நித்யாஸ்ரீ என்ற மகளும், 12 வயதில் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். வீரமணி தொழில் மற்றும் குடும்ப தேவைக்காக தனியார் நிதி நிறு வனம் மற்றும் தனிநபர்களிடம் சுமார் 15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடன் தொகையை உரிய நேரத்திற்குள் செலுத்த முடியாமல் இருந்த வந்த வீரமணியின் வீட்டிற்கு தனியார் நிதி நிறுவன ஊழியர் கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கள் கடன் தொகை கேட்டு தொந்தரவு செய் துள்ளனர். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான வீரமணியும், காளீஸ்வரியும் தனது பிள்ளைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு அரளி விதைகளை தின்றுள்ளனர். இதில் உயிருக்கு போராடியவர்களை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காளீஸ்வரியை பரி சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதே சமயம் வீரமணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தேனி கா.விலக்கு அரசு மருத்து கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் லாவண்யா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.