மேகமலை, வருசநாடு விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கிடுக! டிசம்பரில் தேனியில் பெருந்திரள் போராட்டம்: டி. ரவீந்திரன்
5 Nov 2026, 10:13 pm

மேகமலை, வருசநாடு விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கிடுக! டிசம்பரில் தேனியில் பெருந்திரள் போராட்டம்: டி. ரவீந்திரன்

தேனி, நவ. 5 -கடமலை–மயிலாடும்பாறை, மேகமலை, வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் விவசாயிகளுக்கு வனஉரிமைச் சட்டப்படி நிலப்பட்டா வழங்க வேண்டும்; வனத்துறையின் கெடுபிடிகளை நிறுத்தி அடிப்படைவசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, டிசம்பர் மாதம் தேனியில் பல்லாயிரக்கணக்கானமக்களைத் திரட்டி பெருந்திரள் போராட்டம்நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. டில்லிபாபு, மாவட்டத் தலைவர் டி. கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜி. எம். நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக வருசநாடு மலைக்கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்ட னர். இதையடுத்துத் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி. ரவீந்திரன் கூறியதாவது:

கரும்புக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசுக்கு நன்றி

2025–2026 ஆம் ஆண்டுக்கு ஒரு டன் கரும்புக்கு ₹709.50 ஊக்கத் தொகை அறிவித்து, ஒன்றிய அரசின்தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு மொத்தம் ₹4,000 வழங்க முன்வந்துள்ள தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியிட வேண்டும்

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், குறைந்தபட்சம் ₹1 லட்சம் பயிர்க்கடனையாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அரசாணை வெளியிடப்படாததால் கூட்டுறவுத் துறைஅதிகாரிகளின் நெருக்கடியால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாகஅரசாணையை வெளியிட வேண்டும்.

விவசாயிகள் அடையாள அட்டையைக் கட்டாயமாக்கக் கூடாது

பட்டா வைத்திருக்கும் விவசாயி களுக்கு மட்டுமே ‘பார்மர் ஐடி’ எனப்படும் விவசாயிகள் அடையாள அட்டை வழங்கப்படும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலால், பட்டா இல்லாத அரசு புறம்போக்கு நிலங்கள், அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் சுமார் 30 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயிர்க் காப்பீடு, பி.எம். கிசான் உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற முடியாத நிலை ஏற்படும். எனவே, சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் அல்லது தமிழகத்தில் இத்திட்டத்தைக் கட்டாயமாக்கக் கூடாது.

மேகமலை, வருசநாடு பகுதியில் வனத்துறையின் கெடுபிடிகள்

மேகமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள 98 கிராமங்களை முழுமையாகக்காலி செய்ய முயற்சிப்பது கண்டனத்திற்கு ரியது. பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டப்படி உடனடியாக நிலப்பட்டா வழங்க வேண்டும்.விவசாய நிலங்களுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறைசோதனைச் சாவடிகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. மின் இணைப்பு பெறவும், பழுதடைந்த வீடுகளைப்பழுதுபார்க்கவும் அனுமதி மறுக்கப்படுவதுடன், வனத்துறையினர் மிரட்டுகின்றனர்.

வண்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் கழிப்பறை கட்ட அனுமதி மறுக்கப்படுவ தால்

பெண்களும்முதியோரும்அவதிப்படுகின்றனர். அரசரடி கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமையான பள்ளிக் கட்டடம் இடியும் நிலையில்உள்ளது. அதனைச் சீரமைக்க வனத்துறை அனுமதி மறுப்பதால் மாணவர்கள் மரத்தடியிலும் திறந்தவெளியிலும்கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேதமடைந்தசாலைகளைச் சீரமைக்கவும் வனத்துறைதடை விதிக்கிறது.

டிசம்பரில் பெருந்திரள் போராட்டம்

வனத்துறையின் கெடுபிடிகளைக் கண்டித்தும், வன உரிமைச் சட்டப்படி நிலப்பட்டா மற்றும் அடிப்படை வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத் தரக் கோரியும் டிசம்பர் மாதம் தேனியில் பெருந்திரள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி. டில்லிபாபு மூலம் வனத்துறைச் செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரியுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி, மாநில அரசு கொள்கை முடிவெடுத்து விவசாயிகளுக்கு விரைந்துபட்டா வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப் படாவிட்டால், மலைக் கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தேனி மாவட்டத் தலைமையகத்தில் மாபெரும் போரா ட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார். செய்தியாளர் சந்திப்பின்போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜி. எம். நாகராஜன்உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.