தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி தேனியில் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

yesterday
வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி தேனியில் விவசாயிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
<p>தேனியில், 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் மற்றும் வன உரிமை குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் உள்ள 98 கிராமங்களில், கடந்த 100 ஆண்டுகளாக வன நிலங்களில் குடியிருந்து விவசாயம் செய்து வரும் குடும்பங்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும், 2006-ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின்படி வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்கக் கோரியும், விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்ற உத்தரவிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு தலையிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வன உரிமைக் குழுக்கள் (கடமலை-மயிலை) சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் T.கண்ணன் தலைமையில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.