தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேனி மாவட்ட மக்களின் நில உரிமைப் போராட்டம் வரலாற்றுப் பின்னணியும் வனச் சட்டங்களும் - ஜி.எம்.நாகராஜன்

5 Aug 2026, 9:08 pm
தேனி மாவட்ட மக்களின் நில உரிமைப் போராட்டம் வரலாற்றுப் பின்னணியும் வனச் சட்டங்களும் - ஜி.எம்.நாகராஜன்

தேனி மாவட்ட மக்களின் நில உரிமைப் போராட்டம் வரலாற்றுப் பின்னணியும் வனச் சட்டங்களும் - ஜி.எம்.நாகராஜன்

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்” - திருக்குறள்.

ஒரு நாட்டின் சிறந்த பாதுகாப்பு அரண் என்பது தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயரமான மலையும், குளிர்ந்தநிழல் தரும் காடும் ஆகும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உணர்ந்திருந்தனர்.

இந்நிலையில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வருகைக்கு முன்புவரை காடுகள் முழுவதும் பழங்குடிச் சமூகத்தின் கட்டுப்பாட்டில் சுதந்திரமாகவே இருந்தன.மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் வரிகள் வசூலிக்கப்பட்டதே தவிர, பழங்குடி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படவில்லை. ஆனால், 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1757-இல் பிளாசிப் போருக்குப் பின் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றத் தொடங்கியதும் காடுகளை வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இங்கிலாந்து நாட்டின் கப்பற்படைக்குத் தேவையான தேக்குமரங்களை அனுப்பும் நோக்கிலும், மர ஏற்றுமதிக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன.

1806-இல் கேப்டன் வாட்சன் எனும் காவல்துறை அதிகாரி வனத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல், 1855இல் டல்ஹவுசி பிரபுவால் வெளியிடப்பட்ட வனச் சாசனம் (Charter), 1878 மற்றும் 1927-ஆம்ஆண்டுகளின் “இந்திய வனச் சட்டம்” வரை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், காடுகளில் ஆதிவாசி மக்கள் சுதந்திரமாக நடமாடத் தடை விதிக்கப்பட்டு, வனப்பகுதிகள் அனைத்தும்அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டன. காடுகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கிறோம் என்ற பெயரில் மக்களுக்கும் காட்டிற்குமான உறவுதுண்டிக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவிலும் 1972-ஆம் ஆண்டின் வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம், 1980 மற்றும் 1988-ஆம் ஆண்டுகளின் வனப் பாதுகாப்புத் திருத்தச் சட்டங்கள் மூலம்காலங்காலமாக வனங்களில் வாழ்ந்து வந்த மக்கள் “ஆக்கிரமிப்பாளர்கள்” என முத்திரை குத்தப்பட்டனர். 1976-இல் கொண்டுவரப்பட்ட 42-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வனத்துறை மாநிலப் பட்டியலிலிருந்து ஒன்றிய-மாநில அரசுகளின் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976-ஆம் ஆண்டின் தேசிய விவசாயக் கமிஷன் அறிக்கையும் வன வளங்கள்மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டு, மோதல்களை அதிகரித்தது.

தேனி மாவட்ட மக்களின் வாழ்நிலையும் விவசாயமும்

தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே முதன்மைவாழ்வாதாரமாகக்கொண்டுள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, வாலிப்பாறை, அரசரடி, வெள்ளிமலை ஆகிய பகுதிகள் மூல வைகை நதி உற்பத்தியாகும் காடுகள் சார்ந்த விளைநிலங்களாகும். கண்டமனூர் ஜமீன் ஒழிப்புச் சட்டத்திற்குப் பின், ரயத்துவாரிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்நிலங்களில் பொதுமக்கள் பாரம்பரியமாகப் பயிரிட்டு வருகின்றனர்.

மேகமலை, தும்மக்குண்டு, முருக்கோடை, சிங்கராஜபுரம், வருசநாடு, நரியூத்து, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முத்தலாம்பாறை ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 98 கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் சர்வே எண்கள் 280, 1075, 907/2, 146, 432, 434, 564உள்ளிட்ட நிலங்களில் பருத்தி, இலவம்பஞ்சு, பீன்ஸ், முருங்கை, காபி, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றைச் சாகுபடி செய்து வாழ்கின்றனர். 1919-ஆம் ஆண்டிலேயே பொம்மராஜபுரம் கிராமத்தில் நிலப் பட்டா(செம்புப் பட்டயம்) வழங்கப்பட்டதற்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன.

1978-க்குப் பிறகு சர்வே எண் 280-ஐ வனத்துறை “வனக்காடுகள்” என அறிவித்துக் கெடுபிடிகளைத் தொடங்கியது. இருப்பினும், தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் 45 கி.மீ தார்ச் சாலை வசதி, அரசுப் பேருந்துகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், ரேஷன் கடைகள், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை இப்பகுதிகளில் ஏற்படுத்தித் தந்துள்ளன. ஆனால், 2009-ஆம் ஆண்டில் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்காமலும் ஊராட்சித் தீர்மானங்கள் நிறைவேற்றாமலும் பிற பகுதிகளைக் “காப்புக்காடு” என வனத்துறை அறிவித்து, விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் சரணாலயமும் உச்சநீதிமன்ற உத்தரவும்

ஒன்றிய அரசு 2021-இல் “ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்” (SMTR) என்று தன்னிச்சையாக அறிவித்தது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் 98 கிராமமக்களின் குடியிருப்புகள் இதனுள் வருவதால், பொதுமக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு வாழ்விடப் பாதுகாப்பு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில்24.03.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து, மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (CEC) 2025 ஜூன் 23 முதல் 26 வரைகளஆய்வு மேற்கொண்டதாகக் கூறி ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் வராமலேயே வேறு இடத்தில் அமர்ந்து இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் 98 கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டஏழை விவசாய மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் (C.A No. 6395–6397/2025) உத்தரவிட்டுள்ளது.

இப்பகுதிகளில் பளியர் இனப் பழங்குடி மக்களும், 75ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் வசிக்கின்றனர். 2006-ஆம் ஆண்டின்வன உரிமைச் சட்டத்தின்படி இவர்களுக்கு நில உரிமையோ வீட்டுமனைப் பட்டாவோ இதுவரைவழங்கப்படவில்லை.

ஆக்கிரமிப்பு மற்றும் நில வகைப்பாடு விவரங்கள்

தேனி மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின்படி, மாவட்டத்தில் 4,601 நபர்கள் 5,072.65 ஹெக்டேர் வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட 116 அரசு உள்கட்டமைப்புகளும் அடங்கும். மேலும் அரசுப் பணியாளர்கள் 118 பேர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறிஅவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வனச்சரகம் வாரியான விவரம்:

வ.எண் வனச்சரகம் நபர்கள் (ஹெக்டேர்) பரப்பளவு

1 கண்டமனூர் 1,725 510.902

2 மேகமலை 344 720.735

3 வருசநாடு 2,523 3,758.481

4 சின்னமனூர் 9 82.535

மொத்தம் 4,601 5,072.653

நிலப் பயன்பாட்டு வகைப்பாடு:

வ.எண் வகைவிளக்கம் நபர்கள் பரப்பளவு (ஹெக்டேர்)

1 நிரந்தர வீடு மற்றும் 1,595 1,679.733

2 தற்காலிக வீடு மற்றும் காட்டில் வாழ்வாதாரம் 233 525.204

3 காட்டில் விவசாயம் மட்டும் 2,773 2,867.706

சிஇசி பரிந்துரைகளும் உடனடித் தேவைகளும்

சிஇசி குழு தனது 16 ஜனவரி 2026 தேதியிட்ட அறிக்கையில், வனப்பகுதியிலுள்ள அனைத்து அரசு உள்கட்டமைப்புகளையும் 3 மாதங்களுக்குள் இடித்து அகற்றவும், மின் இணைப்புகளையும் கம்பிகளையும் உடனடியாகத் துண்டிக்கவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், 6 மாத காலத்திற்குள் மக்களை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும், மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஆக்கிரமிப்புகளை அகற்றத் துணைராணுவப் படையைப் பயன்படுத்தலாம் என்றும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு செப்டம்பர் 1, 2026-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், ஆகஸ்ட் 28, 2026-க்குள் உத்தரவை அமல்படுத்திய நிலவர அறிக்கையைத் தாக்கல்செய்யக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையில், 100 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலைக்கிராம விவசாயிகளின் நில உரிமையையும் வன உரிமையையும் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். வனஉரிமைச் சட்டம் 2006-ன் கீழ் தகுதியான பழங்குடியினருக்கும் பாரம்பரியமாக வாழும் குடும்பங்களுக்கும் நிலப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றகோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்வன உரிமைக் குழுவின் பிரதிநிதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் 15.07.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சரையும் தலைமைச் செயலாளரையும் நேரில் சந்தித்து விரிவாக வலியுறுத்தியுள்ளனர்.

நாளை பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இத்தகைய பின்னணியில் மேற்கண்ட 98 கிராமங்களிலும் தங்களது வாழ்வாதாரம் சூறையாடப்படும் அபாயத்தை எதிர்த்து கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வன உரிமைக்குழுக்கள் இணைந்து ஆகஸ்ட் 7 அன்று தேனியில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்நடத்துகின்றன. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்பகுதி மக்களின் வன நிலஉரிமையையும், வாழ்வாதாரங்களையும் உறுதி செய்யும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மார்க்சிஸ்ட் கட்சிதீர்மானித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.