தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சூறாவளிக்காற்றால் வாழைகள் சாய்ந்து பாதிப்பு

29 May 2026, 10:12 pm
சூறாவளிக்காற்றால் வாழைகள் சாய்ந்து பாதிப்பு

சூறாவளிக்காற்றால் வாழைகள் சாய்ந்து பாதிப்பு

தேனி ,மே 29- சூறாவளிக் காற்றால் வாழைகள் சாய்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மே 29 வெள்ளியன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மாவட்ட வன அலுவலர் ஜி.கிரண், உதவி வனப் பாதுகாவலர் சாய் சரண் ரெட்டி , வேளாண்மை இணை இயக்கு நர் சாந்தாமணி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு) நர்மதா, கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர்(விவசாயம்) இரா.வளர்மதி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பண்ணைப்புரத்தை சேர்ந்த விவசாயி ஜெகதீஸ்வரன் என்பவர் சூறாவளிக் காற்றால் வாழைகள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்தால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதாக கூறி கேனில் மண்ணெண்ணெய் கொண்டு வந்து ஊற்ற முயன்றார் .

பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர் . விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட வன அலுவலர் கிரண் உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர் .கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால்,மாவட்ட வன அலுவலர் கிரண் , கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலரிடம் சொல்லாமலேயே கிளம்பி விட்டார் .

தேனி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் கௌரவ நிதி பெரும் திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 26,050 பயனாளிகளில் இதுவரை 23,550 பயனாளிகள் மட்டுமே விவசாய அடையாள எண் பெற்றுள்ளனர்.

மீதமுள்ள பிற விவசாயிகளும் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடைய உடனடியாக விவசாய அடையாள எண்ணை பதிவுசெய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார் . பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு கூட்டத்தில் பேசிய விவாசாயிகள் ,வட்டாட் சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதலு க்கு அலைக்கழிக்கப்படுவதாகவும் ,மின் வாரியத்தில் இலவச இணைப்பு வழங்கு வதில் முறைகேடு உள்ளதாகவும் தெரி வித்தனர்.

கடந்த கனமழை காலத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை .உடனடியாக வழங்க வேண்டும் என தெரி வித்தனர் .

உரங்களை கூடுதல் விலையில் வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர் .

அதற்கு உரங்களின் விலை கூடுதலாக விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.