தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலத்தை அடமானம் வைத்து கடன் செலுத்த முடியாத விவசாயிக்கு 15 ஆண்டுகளுக்கு பின் மக்கள் நீதிமன்றம் மூலம் ஆவணம் ஒப்படைப்பு

12 May 2026, 10:38 pm
நிலத்தை அடமானம் வைத்து கடன் செலுத்த முடியாத விவசாயிக்கு  15 ஆண்டுகளுக்கு பின் மக்கள் நீதிமன்றம் மூலம் ஆவணம் ஒப்படைப்பு
<p><strong>நிலத்தை அடமானம் வைத்து கடன் செலுத்த முடியாத விவசாயிக்கு 15 ஆண்டுகளுக்கு பின் மக்கள் நீதிமன்றம் மூலம் ஆவணம் ஒப்படைப்பு</strong></p><p>தேனி, மே 12- கனரா வங்கியில் நிலத்தை அட மானம் வைத்து கடன் செலுத்த முடி யாத விவசாயிக்கு 15 ஆண்டுகளுக்கு பின் மக்கள் நீதிமன்ற நீதிபதி முன்னி லையில் நில ஆவணம் ஒப்படைக்கப் பட்டது. போடி ஒன்றியம், டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல் வன் என்பவர், தேனி அல்லி நகரம் கனரா வங்கியில் தனது நிலத்தை அட மானம் வைத்து விவசாயக் கடன் பெற்றிருந்தார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் கடனை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டதால், வட்டியுடன் சேர்த்து அவரது கடன் தொகை ரூ.11 லட்சத் திற்கும் மேல் உயர்ந்தது. விவசா யத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் குறிப் பிட்டத் தொகையை செலுத்திய பின் தன்னால் முழுத் தொகையையும் செலுத்த இயலாத சூழ்நிலையை குறிப்பிட்டு, தனது நிலம் சம்பந்தப் பட்ட அசல் ஆவணங்களை மீட்டுத்தர வேண்டுமென அவர் தேனி, நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து, நிரந்தர மக்கள் நீதிமன்றம் சார்பில் தேனி அல்லிநகரம் கனரா வங்கி மேலாளர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டு, இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப் பட்டது. இதன் மூலம், வழக்கு சுமூக மாக தீர்வு காணப்பட்டு நில ஆவ ணங்களை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் உரிய விவ சாயியிடம் தேனி, கனரா வங்கி மேலா ளர் வழங்கினார். மேலும், பொது மக்கள் பொது சேவைக் குறைபாடு தொடர்பாக பிரச்சனைகளில் சிக்கி யவர்கள், நிரந்தர மக்கள் நீதி மன்றத்தை அணுகி குறைந்த செல வில் விரைவான சமரச தீர்வைப் பெற லாம் என நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதி பதி ஏ.கே.கே ரஜினி தெரிவித்துள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.