போதைப்பொருள் தடுப்பு தினம் தேனியில் மாரத்தான் ஓட்டம் ஆட்சியர் வைத்திநாதன் தொடங்கி வைத்தார்
26 Jun 2026, 10:58 pm
<p><strong>போதைப்பொருள் தடுப்பு தினம் தேனியில் மாரத்தான் ஓட்டம் ஆட்சியர் வைத்திநாதன் தொடங்கி வைத்தார்</strong></p><p>தேனி ,ஜூன்.26- உலக போதைப்பொருள் தடுப்பு தின சர்வதேச நா ளையொட்டி போதைப் பொருள் இல்லாத சமூ கத்தை உருவாக்க வேண் டும் என்ற நோக்கில்,தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விழிப்பு ணர்வு ஓட்டம் மற்றும் விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சி யர் இரா.வைத்திநாதன் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண வர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தொடர் ஓட்டம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அறியும் வண்ணம் பதாகைகள் ஏந்தி நிறைவாக மாவட்ட விளை யாட்டு மைதானத்தை வந்த டைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனை வருக்கும் பாராட்டுச் சான்றி தழ்களை பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சபரி ஜங்கரன் வழங்கி பாராட்டி னார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், உதவி ஆணையர் பஞ்சாபிகேசன், துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன், மாவட்ட விளை யாட்டு அலுவலர் சிவக் குமார், மாவட்ட குழந்தை கள் நல அலுவலர் மதியழ கன் உள்ளிட்ட அலுவலர் கள் பலர் கலந்து கொண்ட னர்.</p>
