திருச்சி விரைவு செய்திகள்
5 Oct 2026, 9:13 pm

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு

தேனி, அக்.5-தேனி மாவட்டத்தில் 2026–27-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா சிறப்பு பருவ நெல் பயிருக்கு ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.இதன்படி, தேனி மாவட்டத்தில் சம்பா சிறப்பு பருவ நெல் சாகுபடிக்காக ஆண்டிபட்டி, கண்டமனூர், ராஜதானி, தேவதானப்பட்டி, தென்கரை, தேனி, கொடுவிலார்பட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, போடிநாயக்கனூர், கோடாங் கிப்பட்டி,ராசிங்காபுரம் ஆகிய 14 குறுவட்டங்கள் (பிர்காக்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.காப்பீட்டுத் தொகை: ஒரு ஏக்கருக்கு ரூ.38,828.விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம்: காப்பீட் டுத் தொகையில் 1.5 சதவீதமாக, ஒரு ஏக்கருக்கு ரூ.589.50.கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

தாய்-தந்தையை இழந்து பழுதடைந்த வீட்டில் தவிக்கும் பிள்ளைகள்

தேனி, அக்.5-தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மச்சக் காளையின் மனைவி ராசாத்தி, 9 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், மச்சக் காளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தவறி விழுந்து உயிரிழந்தார்.இதனால், அவர்களது பிள்ளைகளான பெரியமாரதி (செவிலியர்), பெரியமாரகன் (ஐடிஐ மாணவர்), மாலதி (12-ஆம் வகுப்பு மாணவி) ஆகிய மூவரும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.குடும்பத்தின் மூத்தவரான பெரியமாரதி, ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதம் ரூ.7,000 சம்பளத்தில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். தனது வருமானத்தின் மூலம் தம்பி, தங்கையைப் பரா

மரித்து வருவதுடன், அவர்களுக்கு தாய் ஸ்தானத்தில் இருந்து ஆதரவளித்து வருகிறார்.இவர்கள் வசித்து வரும் பழைய வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதுடன், கழிப்பறை வசதியும் இல்லை. மழைக்காலங்களில் வீட்டில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் அச்சத்துடன்தங்க வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மச்சக்காளை இறந்தபோது, இவர்களுக்கு உதவ முன்வந்தவர்களில் ஒருவரான தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி, வீடு கட்டித் தருவதாக உறுதியளித்ததுடன், முதற்கட்டமாக செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் வீடு கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில், பின்னர் பணிகள் தொடரப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து தவெக மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டும் உரிய உதவி கிடைக்கவில்லை எனக் கூறி, வீடின்றி தவித்து வரும் தங்களுக்கு உதவிடக் கோரி பெரியமாரதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

நாய்க்குட்டியின் சடலத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்

தேனி, அக்.5-தேனி அருகே உள்ள சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியம்மாள். இவர் 3 மாத நாய்க்குட்டியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், முன்விரோதம் கார

ணமாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரண்யா மரக்கட்டையை வீசியதாகவும், அது நாய்க்குட்டி மீது பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, உயிரிழந்த நாய்க்குட்டியின் சடலத்தை ஐஸ் பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்த ஜெயபாண்டியம்மாள், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.