தேனி மாவட்டச் சிறையில் அதிர்ச்சி சம்பவம் சிறைவாசிகள் 17 பேர் தப்பியோட்டம்! சிறைத்துறை டிஜிபி நேரில் விசாரணை; 9 சிறைப் பணியாளர்கள் இடைநீக்கம்
27 Oct 2026, 9:34 pm

தேனி மாவட்டச் சிறையில் அதிர்ச்சி சம்பவம் சிறைவாசிகள் 17 பேர் தப்பியோட்டம்! சிறைத்துறை டிஜிபி நேரில் விசாரணை; 9 சிறைப் பணியாளர்கள் இடைநீக்கம்

தேனி, அக். 27 -தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில், 17 விசாரணை சிறைவாசிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.தப்பியோடியவர்களில் 13 பேர் பிடிபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேக்கம்பட்டி வனப்பகு தியை ஒட்டி அமைந்துள்ள மாவட்டச் சிறையில் நான்கு பிளாக்குகளில் சுமார் 323விசாரணை சிறைவாசிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இதில், மூன்றாவது பிளாக்கில் கஞ்சா கடத்தல், திருட்டு,கொலை மிரட்டல், ஆயுதவன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், இராம நாதபுரம், சிவகங்கை உள்ளிட்டமாவட்டங்களைச் சேர்ந்த 17 பேர் அடைக்கப் பட்டிருந்தனர்.

வலிப்பு வந்ததாக கூறி நாடகம்?

இந்நிலையில், திங்கட் கிழமை இரவு சுமார் 10.15 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த முத்துஇளங்கோவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சக கைதிகள் கூச்சலிட்டதாகவும், அவருக்கு ஏற்கெனவே வலிப்பு வரும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுவதால், பதற்றமடைந்த சிறப்பு சார்பு -ஆய்வாளர் ஸ்டாலின் பிரபு, மதன்மோகன் உள்ளிட்ட காவலர்கள் கதவைத் திறந்துஉள்ளே சென்றபோது, பதுங்கியிருந்த சிறைவாசி கள் காவலர்கள் மீது போர்வையைப் போர்த்தி சரமாரியாகத் தாக்கிவிட்டு, மூன்றாவது பிளாக்கிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.பின்னர், சமைய லறைக்குச் சென்ற சிறை வாசிகள், அங்கிருந்த கரண்டி உள்ளிட்ட பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்தி, இரண்டாவது வாயிலில் பாதுகாப்புப் பணியில்இருந்த காவலர் தங்கப்பாண்டியைத் தாக்கி, அவரிடமிருந்த சாவியைப் பறித்து வாயிலைத் திறந்து தப்பியோடியதாகக் கூறப்படு கிறது.

வனப்பகுதிக்குள் தப்பியோட்டம்

சிறையிலிருந்து வெளியேறிய 17 பேரும், கண்ட மனூர் பிரதான சாலை வழியாக, இருள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் புகுந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.இந்தத் தாக்குதலில் காயமடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மதன்மோகன், காவலர்கள் தங்கப்பாண்டி, ஸ்டாலின் பிரபு உள்ளிட்டோர் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, டிரோன்கள் மூலமாகவும் வனப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.

சிறைத்துறை டிஜிபி நேரில் விசாரணை

17 விசாரணை சிறைவாசிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் செவ்வாய்க்கிழமை காலை தேக்கம்பட்டி மாவட்டச் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.சிறைகள் துறைத்தலைவர் ஆர். கனகராஜ், மதுரை சரகச் சிறைத்துறைத் துணைத் தலைவர் ஏ. முருகேசன், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ்,தென்மண்டலக் காவல்துறைத் தலைவர் விஜேந்திர பிதாரி, மதுரை காவல்துறைத் துணைத்தலைவர் அபினவ் குமார், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்பிரவீன் கௌதம் ஆகியோரும் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

17 பேர் மீது வழக்குப் பதிவு; 9 பேர் இடைநீக்கம்

அதைத்தொடர்ந்து, மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ் கண்டமனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய 17 சிறைவாசிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாகச் சிறைப்பணியாளர்கள் 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

சிறைவாசிகள் விபரம்

தப்பியோடிய சிறைவாசிகளில், மதுரை ஜெய்ஹிந்துபுரம், சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பசாமி (எ) மதன், சிவகங்கைமாவட்டம் சுந்தரநடப்பைச் சேர்ந்த சின்னா மகன் தருண்குமார், மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த கலையரசன் மகன் ராஜ்குமார், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சிவவள்ளிபுரத்தைச் சக்திவேல் மகன் பாண்டிச்செல்வம், சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த பழனிசுந்தரம் மகன் சபரிநாதன், மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியைச் சேர்ந்த பாண்டி மகன் நிஷாந்த், மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்து இளங்கோவன், மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன்கார்த்திக் ராஜா, மதுரை மேலமடையைச் சேர்ந்த ஜெகநாதமூர்த்தி மகன் பிரசாந்த் (எ) லிங்க பிரசாந்த், அப்துல்ரசாக் மகன் ராஜா சிக்கந்தர், தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் சிலம்பரசன், மதுரை வாழைத்தோப்பைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் சோலை முகிலேஸ்வரன், மதுரை பெருங்குடி பர்மா காலனியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் பிரவீன்குமார் ஆகிய 13 பேர் பிடிபட்டுஉள்ளனர்.மீனாட்சிசுந்தரம், பொன் முத்துச்செல்வம், ரெஜின், திருப்பதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.