தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதியோர் -மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க  தபால் வாக்கு படிவம் விநியோகம்  தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

20 Mar 2026, 2:55 pm
முதியோர் -மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க  தபால் வாக்கு படிவம் விநியோகம்  தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
<p>முதியோர் -மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க &nbsp;தபால் வாக்கு படிவம் விநியோகம் &nbsp;தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு</p> <p>&nbsp;தேனி ,மார்ச் 20- &nbsp;மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் &nbsp;தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று 12-டி படிவம் வழங்கும் பணிகள் &nbsp; நடைபெற்று வருவதை தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் &nbsp;/ &nbsp;மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் &nbsp;ஆய்வு மேற்கொண்டார். &nbsp;வாக்குப்பதிவு நாளான்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று &nbsp;வாக்களிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்குகளை உறுதி செய்யும் விதமாக அவர்களின் வீடுகளுக்கே &nbsp;நேரில் சென்று தபால் வாக்கினைப் பதிவு செய்திட உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. &nbsp;அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு செலுத்துவதற்கான 12-டி படிவம் &nbsp;வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களை அறிய 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். ஆய்வு &nbsp;ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாச்சியார் ்புரம் மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதிகளில் &nbsp;மூத்த குடிமக்கள் (85 வயதிற்கு மேற்பட்டோர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று 12 டி &nbsp;படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை &nbsp;மாவட்ட ஆட்சியர் &nbsp;நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சதீஸ்குமார், ஜாஹிர் உசேன் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் செல்வி பார்கவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.