தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேனி மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநிலப் போட்டிக்கு 7 குழுக்கள் தேர்வு

30 Oct 2026, 9:36 pm
தேனி மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநிலப் போட்டிக்கு 7 குழுக்கள் தேர்வு

தேனி மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு மாநிலப் போட்டிக்கு 7 குழுக்கள் தேர்வு

தேனி, அக்.30-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி மாவட்ட அளவிலான தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாடு பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு மாவட்டத்தலைவர் மா. மகேஷ்தலைமை வகித்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் மு.மணிகண்டன் மாநாட்டு அறிமுக உரையாற்றினார்.

“நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இப்போட்டியில், 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

மாநில மாநாட்டிற்கு தேர்வுஜூனியர் பிரிவு: டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (எம்.லேகாஸ்ரீ, சி.கிருத்திகா ஸ்ரீ), பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி (எம்.மித்ரா, வி.ஹாசினி), ஸ்ரீரங்கபுரம் எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி (ஏ.ஸ்ரீஜித், டி.தர்ஷன்), போடி சிசம்மெட்ரிக் பள்ளி (பி.விதுஷா, ஹம்னா பாத்திமா).

சீனியர் பிரிவு: சாத்தா கோவில்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி (ஆர்.கீர்த்திகேஸ், ஜீவபாரதி), சின்னமனூர் புனித பிரான்சிஸ் அசிசி மெட்ரிக் பள்ளி (எஸ்.சமீரா, கே.எஸ்.கரிஷ்மா), போடி சிசம் மெட்ரிக் பள்ளி (ஜனவந்தினி, ஓவியா ஸ்ரீ).தேர்வு செய்யப்பட்ட இந்த 7 குழுக்களின் ஆய்வுக் கட்டுரைகள், நவம்பர் இறுதியில் திருப்பூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களை மாவட்டக் கல்வி அலுவலர் எம்.சுருளி

வேலு, வழிகாட்டி ஆசிரியர்களைக் கல்லூரி அருட்சகோதரி எம்.ரெஜினாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

மாவட்ட துணைத் தலைவர் முனைவர் மேரி சுபா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.