தேனி மாவட்டத்தில் விதொச ஆர்ப்பாட்டம்
21 May 2026, 10:55 pm

தேனி மாவட்டத்தில் விதொச ஆர்ப்பாட்டம்

தேனி, மே 21- தேனி மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த கோரி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் ஆண்டி பட்டி, போடி மற்றும் பெரிய குளம் ஒன்றியங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட் டங்களில், கிராமப்புற விவ சாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்டத்தில் செய்யப்பட்ட மாற் றங்களை ரத்து செய்து, மகா த்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பழைய நடைமுறையை மீண் டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவது டன், நாள் கூலியாக ரூ.700 நிர்ணயிக்க வேண்டும் என்ப தும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

ஆண்டிபட்டி ஆண்டிபட்டி ஒன்றியத்தி லுள்ள ஏத்தகோயில் மற்றும் அனுப்பப்பட்டி ஊராட்சி களில் நடைபெற்ற ஆர்ப்பாட் டங்களில் விவசாய தொழி லாளர் சங்க தலைவர் ஏ.வி. அண்ணாமலை, ஒன்றிய தலைவர் எஸ்.அய்யர், செய லாளர் ஜெயராமன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

பெரியகுளம் பெரியகுளம் ஒன்றியத் தின் கீழவடகரை ஊராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சுப்ரமணி, சிஐடியு மாவட்ட பொருளாளர் சு. வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெயமங்கலத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க தலை வர் எம்.வி. முருகன், சிஐடியு தலைவர் ஆர்.கே.ராமர் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தினர்.

போடி போடி அருகே சில்ல மரத்துப்பட்டி ஊராட்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயி கள் சங்க மாநிலக்குழு உறுப் பினர் கே.ராஜப்பன், மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டி யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள், “கிராமப்புற ஏழை தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நூறு நாள் வேலை திட்டத்தை பலப் படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர்.