தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

14 May 2026, 9:01 pm
திருச்சி விரைவு செய்திகள்

திருவிழாவுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிக்க முயற்சி

தேனி, மே 14- தேனி அல்லிநகரம் வி.எம்.சாவடி தெருவைச் சேர்ந்த வியாபாரி ரங்கராஜ் (38), இவரது மனைவி நாகராணி (34), மகன் புவனேஷ்(13). இவர்கள் மூவரும் புதனன்று இரவு வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா வுக்குச் சென்றிருந்தனர். தரிசனம் முடித்து விட்டு வியா ழன் அதிகாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். தேனி புறவழிச்சாலை ஆதிபட்டி பாலம் அருகே வந்த போது தலைக்கவசம் அணிந்தபடி பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மூன்று பேர் திடீ ரென இவர்களை மறித்தனர். பின்பு கையில் வைத்திருந்த குறடு மூலம் நாகராணி யின் அவர் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்ற னர். இதில் குறடு நாகராணியின் கழுத்தில் குத்தியதால் வலி யால் அலறினார். மேலும் கையில் செயினை இறுகப் பிடித்துக் கொண்டதால் செயினை பறிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் தப்பிச் சென்றனர். புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மகேஷ் விசா ரித்து வருகிறார். வீரபாண்டி திருவிழா 24 மணி நேரமும் நடைபெறு வதால் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கார் மோதி வாலிபர் 2 பேர் காயம்

தேனி, மே 14- போடி அருகே கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தது குறித்து காவல்துறை யினர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசா ரிக்கின்றனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். போடி அருகே எரணம்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி மகன் வீரக்குமார் (23). இவரும் இதே ஊரைச் சேர்ந்த வல்லரசு, சந்தோஷ்குமார் ஆகிய மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா வுக்குச் சென்றுள்ளனர். நாகலாபுரம்-கரையாண்பட்டி சாலையில் மாட்டுப் பண்ணை அருகே சென்றபோது எதி ரில் வந்த சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வீரக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். வல்லரசு, சந்தோஷ்குமார் இருவரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். விபத்து குறித்து போடி தாலுகா காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தேவா ரத்தைச் சேர்ந்த கணேசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நத்தம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நத்தம், மே 15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொறிப் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு(28). வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராசு, கடந்த 8 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலை யில் இருந்த அவரை, அக்கம் பக்கத்தினர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் ராசு புதனன்று இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

சின்னாளப்பட்டி, மே 14- தமிழ்நாடு முழுவதும் தற்போது அனைத்து அரசு கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கலைக் கல்லூரிகளி லும் மற்றும் பல்வேறு துறைகளிலும் பிளஸ் டூ படித்து வெற்றி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதேபோல் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இள நிலை பாடப்பிரிவுகளில் சேர்வதற்காக www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை 7ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. பி. ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வரலாறு (ஆங்கில வழி), பி. காம்.வணிக வியல், பி. பி. ஏ. தொழில் நிர்வாகவியல், பி.எஸ்.சி.வேதி யியல், புவியியல், இயற்பியல், கணிதம், கணினி அறி வியல், மனையியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளது. சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் என்று கல்லூரி முதல்வர் கு.சக்திஸ்ரீ தெரிவித்துள்ளார்.

போதையில் 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தேனி, மே 14- போடியில் மது போதையில் மூன்றாவது மாடியிலி ருந்து தவறி விழுந்தத் தொழிலாளி புதன்கிழமை உயி ரிழந்தது குறித்து போடி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போடி குப்பிநாயக்கன்பட்டி பெரியாண்டவர் கோயில் தெருவில் வசிப்பவர் சந்தியாகு மகன் சக்திவேல் (36). இவர் சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு இறப் புக்குச் சென்றுவிட்டு மது போதையில் வீட்டுக்கு வந்துள் ளார். வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தவர் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகர் காவல்நிலையத்தில் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய 4 சிறார்கள் உள்பட 5 பேர் கைது

தேனி, மே 14- பெரியகுளம் அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய கம்பம் பகுதியைச் சேர்ந்த 4 சிறார்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிட மிருந்து 7.570 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். பேருந்து மூலம் கஞ்சா எடுத்துச் செல்வதாக தேனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பெரியகுளம் தென்கரை காவல் நிலைய போலீசார் செவ்வாய்க் கிழமை திண்டுக்கல் -குமுளி புறவழி சாலையில் வடுக பட்டி பிரிவு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சோதனை செய்த போது, 5 பேர் பேருந்தி லிருந்து இறங்கி நடந்து சென்றனர். அவர்களை பிடித்து சோதனை செய்த னர். அப்போது, கம்பம் புதுப்பட்டி இந்திரா குடியி ருப்பைச் சேர்ந்த ராஜேஷ் என்ற யாபேஷ் (22), 17 வயது 4 சிறார்கள் 4 பேர் 7 கிலோ 570 கிராம் கஞ்சா எடுத்துச் சென்றது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 5 பேரை யும் கைது செய்தனர். சிறார் கள் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் - இடையக்கோட்டை வழியாக இயக்கப்பட்ட மாலை நேர அரசுப் பேருந்து நிறுத்தம்

ஒட்டன்சத்திரம், மே 14- திண்டுக்கலில் இருந்து இடையக்கோட்டை வழி யாக மாலை நேரத்தில் இயக் கப்பட்டு வந்த அரசு நகர பேருந்து கடந்த ஒரு வார மாக திடீரென நிறுத்தப்பட்ட தால், 50-க்கும் மேற்பட்ட கிரா மங்களைச் சேர்ந்த பொது மக்கள் கடும் அவதிக்குள்ளா கியுள்ளனர். திண்டுக்கலில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப் படும் இந்த அரசு நகர பேரு ந்து, தாடிக்கொம்பு, சுக்காம் பட்டி, கெண்டையகவுண்ட னூர், சாலையூர் நால்ரோடு வழியாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நவாலூற்று, கல்லுப்பட்டி பிரிவு, புல்லா கவுண்டனூர், இடையக் கோட்டை, நாரப்பநாயக் கன்பட்டி, எல்லைப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக மார்க்கம்பட்டிக்கு இரவு 7.50 மணிக்கு சென்று வந் தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேடசந்தூர் நோக்கி இயக்கப்பட்ட இந்த பேருந்து, வேடசந்தூர் பணி மனை மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த மாலை நேர கடைசி நகரப் பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டதால், திண்டுக் கல் மற்றும் வேடசந்தூரில் இருந்து சொந்த ஊர்க ளுக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதியடை ந்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல் லூரி மாணவர்கள், தினக் கூலி தொழிலாளர்கள் மற் றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வசதி உள்ளவர்கள் ஆட்டோ மற்றும் கார் வாடகைக்கு எடுத்து வீடு திரும்பும் நிலை யில், ஏழை மற்றும் எளிய மக்கள் பேருந்து நிலையங்க ளில் இரவு முழுவதும் காத்தி ருந்து, மறுநாள் காலை மட் டுமே சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் இளம் பெண்கள் பாதுகாப் பற்ற சூழலில் இரவு நேரங்க ளில் பேருந்து நிலையங்க ளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து துறையும் உடனடியாக தலையிட்டு, திண்டுக்கலில் இருந்து இடையக்கோட்டை வழி யாக மார்க்கம்பட்டி வரை மாலை நேரத்தில் இயக்கப் பட்டு வந்த அரசு நகரப் பேருந்து சேவையை மீண் டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து துறை சர்வர் பழுதால் லாரி உரிமையாளர்கள் அவதி

ஒட்டன்சத்திரம், மே 14- தமிழ்நாடு போக்குவரத்து துறையின் ஆன்லைன் பணம் செலுத்தும் சர்வர் கடந்த ஒரு வாரமாக முறையாக இயங்காததால், சாலை வரி செலுத்த முடியாமல் லாரி மற்றும் பிற வாகன உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாகனங்களுக்கான சாலை வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மே 15 என்ப தால், வாகன உரிமையாளர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். ஆன்லைன் மூல மாக மட்டுமே வரி செலுத்தும் நடைமுறை இருப்பதால், வட்டார போக்குவரத்து அலு வலகங்களிலும் நேரடியாக பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கையில் பணம் வைத்தி ருந்தும் வரி செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்தாத பட்சத்தில் அபராதம் மற்றும் வட்டி சேர்த்து கட்ட வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக லாரி உரிமையாளர்களுக்கு அபராதத்துடன் சேர்த்து சுமார் ரூ.30 ஆயிரம் வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த தொகை வாகனத்தின் சக்கர எண்ணிக்கை யைப் பொறுத்து மாறுபடும். போக்குவரத்து துறையின் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கான பாதிப்பை வாகன உரி மையாளர்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டு கின்றனர். எனவே, சாலை வரி செலுத்துவதற்கான மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்து, வாகன உரிமையாளர்களின் சிரமத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

விருதுநகர், மே 14- விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள். அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 281 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 897 வாக னங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 688 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 656 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 32 பள்ளி வாக னங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்ற வையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாக னங்களின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தீயணைப்பு கருவிகள், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டி, அவசர கால வழி, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளதா எனவும், முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ.இல் இருந்து 30 செ.மீ க்குள் உள்ளதா எனவும், புத்தகப்பைகள் வைக்க வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.