தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் கடும் அபராதம்! தேனி மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை

30 Oct 2026, 9:33 pm
தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை:  பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் கடும் அபராதம்! தேனி மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை

தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் கடும் அபராதம்! தேனி மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை

தேனி, அக். 30-தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்,பிராணிகளின் நலனைப் பேணவும் தெருநாய்கள் கட்டுப்பாடு மற்றும் சுற்றித்திரியும் கால்நடைகள் மேலாண்மை தீவிரப்படுத்தப்படும் என்று மாவட்டஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளியன்று பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கத்தின்(SPCA) செயற்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:மாவட்டத்தில் தெருநாய்கள் மற்றும் ஆதரவற்ற பிராணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முதற்கட்டமாக தெருநாய்களை முறையாகக் கணக்கெடுத்துஅவற்றின் எண்ணிக்கையைக் கண்காணிக்க வேண்டும். விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், தெருநாய்களுக்குத் தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.கருத்தடை செய்யப்பட்ட நாய்களைப் பாதுகாப்பாகப் பராமரித்து, விதிமுறைகளின்படி அவை பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் விடுவிக்க வேண்டும். தெருநாய்கள் மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து இம்முகாம்களை விரைந்து நடத்த வேண்டும்.

கடும் அபராதம்

பள்ளி வளாகங்கள், மருத்துவமனைகள், பிரதான சாலைகள் மற்றும்மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கும், பள்ளிமாணவர்களுக்கும் பெரும்இடையூறுகளும் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை உள்ளாட்சித் துறையினர் உடனடியாகப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்குக் கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், பிடிக்கப்படும் மாடுகளைப் பராமரிக்க உள்ளாட்சித் துறை மூலம் தற்காலிகக் கோசாலைகளை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளி வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும்இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதைத்தவிர்க்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் முறைப்படி அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உணவு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறி செயல்படுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும்.இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்மருத்துவர் கிரிஜா, காவல், வருவாய், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி, வனம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.