பள்ளிகளில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கல்
5 Jun 2026, 1:51 am
<p><strong>பள்ளிகளில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கல்</strong></p><p>தேனி, ஜூன் 4- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொட ர்ந்து, பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம், போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பது உள்ளிட்ட அம்சங் களை ஆய்வு செய்த அவர், உணவு தயாரிக்கும் சமைய லறை, குடிநீர் வசதி மற்றும் உணவுப் பொருட்களின் இருப்பையும் பார்வை யிட்டார். தொடர்ந்து, லட்சுமி புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். மேலும், புதிய கல்வியாண் டில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழி வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், பள்ளி வளாகத்தை தூய்மை யாக பராமரிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வச திகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, லட்சுமிபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.</p>
