முந்தய பக்கம்

மளிகைப் பொருட்கள் சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

31 Oct 2026, 11:22 pm
மளிகைப் பொருட்கள் சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மளிகைப் பொருட்கள் சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தேனி, அக்.31-அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையை பெரியகுளத்தில் மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்தார்.

இத்தொகுப்பில் கடலைப்பருப்பு 250 கிராம், பாசிப்பருப்பு 250 கிராம், காய்ந்த மிளகாய் 100 கிராம், மல்லி விதை 150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு 100 கிராம், உடைத்த உளுந்தம் பருப்பு 100 கிராம், சீரகம் 50 கிராம், சோம்பு 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையிலான 10 பொருட்கள்இடம்பெற்றுள்ளன.

தேனி மாவட்டத்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் நுகர்வோர் மொத்த கூட்டுறவுப் பண்டகசாலை, சக்கம் பட்டி, ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் கூட்டுறவுப் பண்டகசாலைகளில் சனிக்கிழமை முதல் இத்தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் க.சபரிஐங்கரன், சார் ஆட்சியர் தவலேந்து, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் நர்மதா, வட்டாட்சியர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram