அறிவுசார் மையத்தில் குடிநீர், மின்விசிறி வசதி ஆட்சியர் நடவடிக்கை
yesterday
<p><strong>அறிவுசார் மையத்தில் குடிநீர், மின்விசிறி வசதி ஆட்சியர் நடவடிக்கை</strong></p><p> தேனி, ஜூன் 21- தேனியில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தில் கூடுதல் மின்விசிறி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆர்.வைத்திநாதன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். தேனியில் உள்ள அறிவுசார் மையத்தை மாவட்ட ஆட்சி யர் ஆர்.வைத்திநாதன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாண வர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தயாரிப்பு நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்ட றிந்தார். மேலும், போட்டித் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்வ தற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு ஆலோ சனைகள் வழங்கிய அவர், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இலக்குகளை அடைய முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது, அறிவுசார் மையத்தில் பயிலும் மாணவர்கள் கூடுதல் மின்விசிறிகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாணவர்களின் கோரிக்கையை உடனடி யாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சி யர் உத்தரவிட்டார். அதன் பேரில், நகராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் மின்விசிறிகள் பொருத்தப்பட்டதுடன், குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டியும் அமைக்கப்பட்டு உடனடி நட வடிக்கை எடுக்கப்பட்டது.</p>
