தேனி வட்டத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க நிலம் தேர்வு
30 Oct 2026, 9:39 pm

தேனி வட்டத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க நிலம் தேர்வு

தேனி ஆட்சியர் ஆய்வு

தேனி, அக்.30-தேனி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்வ.சிவகிருஷ்ணமூர்த்தி வெள்ளியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அதன்வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அங்கன்வாடி மையப் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, குழந்தைகளின் வருகை விவரங்களையும் கேட்டறிந்தார்.தொடர்ந்து, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தப்புக்குண்டு மற்றும் கோட்டூர் பகுதிகளில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான இடங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அங்கு தேவையான அடிப்படை வசதிகள், சாத்தியக்கூறுகள் குறித்துஅலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும், பாலகிருஷ்ணாபுரம் மற்றும்அம்பாசமுத்திரம் பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையக் கட்டிடங்களைச் சுகாதாரத்துறையிடம் ஒப்படைப்பது தொடர்பாகவும் புலத்தணிக்கை மேற்கொண்டார்.