தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணிகள் மீறுசமுத்திரம் கண்மாயில் தேனி ஆட்சியர் ஆய்வு

14 May 2026, 9:04 pm
பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணிகள்  மீறுசமுத்திரம் கண்மாயில் தேனி ஆட்சியர் ஆய்வு
<p><strong>பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணிகள் மீறுசமுத்திரம் கண்மாயில் தேனி ஆட்சியர் ஆய்வு</strong></p><p><strong>பொழுதுபோக்கு அம்சத்துடன் நவீனப்படுத்தும் பணிகள் மீறுசமுத்திரம் கண்மாயில் தேனி ஆட்சியர் ஆய்வு</strong>நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் நேரில் ஆய்வு மேற் கொண்டார். தேனி நகரின் பொழுது போக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத் திரம் கண்மாயில் நடை பயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப் பெற்ற தைத் தொடர்ந்து, மீறுசமுத் திரம் கண்மாயில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத் திற்கு ரூ.7.40 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மீறு சமுத்திரம் கண்மாயின் கரை யை பலப்படுத்துதல், நடை பாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமி டம், நுழைவுவாயில், அலு வலகக் கட்டடம், பாதுகாவ லர் அறை, நவீன வசதிகளு டன் கூடிய கழிப்பறை, சாய்வு தளம், அமரும் மேடை, உண வுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங் கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்காணிப்பு புகைப்படக் கருவி அமைத் தல், பூங்கா மின் வசதிகள் அமைத்தல், படகுகள் மற் றும் பூங்கா விளையாட்டு கரு விகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம், மேற்குறிப் பிட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட ஆட் சியர் குறிப்பிட்ட காலத்திற் குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந் தப்பட்ட துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், செயற் பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) சரவ ணன், செய்தி மக்கள் தொட ர்பு அலுவலர் ஏ.எடிசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.