முந்தய பக்கம்

பெரியகுளத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் : தேனி ஆட்சியர் ஆய்வு

10 Jul 2026, 9:06 pm
பெரியகுளத்தில் வளர்ச்சி  திட்டப்பணிகள் : தேனி ஆட்சியர் ஆய்வு
<p><strong>பெரியகுளத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் : தேனி ஆட்சியர் ஆய்வு</strong></p><p>தேனி ,ஜூலை.10- பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.124. 85 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிக ளை மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் நேரில் ஆய்வு செய்தார் . தேனி மாவட்டம், பெரிய குளம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட பொம்மிநாயக் கன்பட்டி ஊராட்சியில் ரூ.13.30 இலட்சம் மதிப் பீட்டில் கால்நடை மருத்துவ மனை கட்டிடம், சில்வார் பட்டி ஊராட்சியில் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்ப றைக் கட்டிடம் ,டி.வாடி பட்டி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில், ரூ.5.80 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டு மானப் பணிகள் , எண்டப் புளி ஊராட்சியில் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் புதி தாக அங்கன்வாடி மையம் கட்டிடம் , ஜல்லிப்பட்டி ஊராட்சியில் ரூ.11.60 இலட்சம் மதிப்பீட்டிலும், வடபுதுப்பட்டி ஊராட்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிலும் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு விரைவில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், புவனேஷ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உட னிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram