முந்தய பக்கம்

வீரபாண்டி பேரூராட்சியில் ஆட்சியர் ஆய்வு

1 Oct 2026, 11:29 pm
வீரபாண்டி பேரூராட்சியில் ஆட்சியர் ஆய்வு
<p><strong>வீரபாண்டி பேரூராட்சியில் ஆட்சியர் ஆய்வு</strong></p><p>தேனி, அக்.1-தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத் துக்குச் சென்ற ஆட்சியர், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, பதிவேடுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, குழந்தைகளின் கல் வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.</p><p>தொடர்ந்து, வீரபாண்டி கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தையும், நியாயவிலைக் கடையைப் பார்வையிட்டு பொருட் களின் இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.பின்னர், தேனி சமூகநீதி மாணவர் விடுதியைப் பார் வையிட்ட ஆட்சியர், உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார். </p>
Share
FacebookXWhatsAppTelegram