கூடலூர் அருகே பழங்குடி மக்களுக்கு 52 புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை தேனி மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
18 Jul 2026, 9:21 pm
<p><strong>கூடலூர் அருகே பழங்குடி மக்களுக்கு 52 புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை தேனி மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டு</strong></p><p>தேனி, ஜூலை 18- கூடலூர் அருகே பளியன் குடியில் பழங்குடி மக்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று குறைகளை கேட்ட மாவட்ட ஆட்சியர் வைத்தி நாதன், 52 புதிய வீடுகள், மின் விளக்குகள், குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். தேனி ஆட்சியராக பொறுப்பேற்ற பின் பழங் குடி மக்களை நேரில் சந் தித்து குறைகளை கேட்டு, உடனே நிறைவேற்றி வருகி றார். கடந்த வாரம் போடி அருகே உள்ள சிறைக்காடு என்னும் பழங்குடி மக்கள் குடியிருப்புகளுக்கு நேரில் சென்ற ஆட்சியர் வைத்தி நாதன், அவர்களின் குறை களை கேட்டறிந்தார். மின் விளக்குகள், வீடுகள் பழுது, குழந்தைகள் விளையாட மைதானம் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வைத் தனர். அவர் அலுவலகம் திரு ம்புவதற்கு முன்னரே சோலார் மின் விளக்குகள் உடனடி யாக பொருத்தப்பட்டது. மறு நாள் ஜேசிபி வாகனம் வர வழைக்கப்பட்டு விளை யாட்டு மைதானம் உருவாக் கப்பட்டது. இப்படி மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு பொதுமக்களிடம் பாராட்டை யும், வரவேற்பையும் பெற் றுள்ளது. புளியங்குடியில் 52 வீடுகள் இந்நிலையில் சனிக் கிழமை கூடலூர் அருகே புளி யங்குடியில் உள்ள பழங்குடி மக்களின் குடியிருப்புக ளுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அவர்களின் தேவைக் குறித்து கேட்டறிந்ததுடன், நீண்டநாள் கோரிக்கையான இப்பகுதிக்கு புதிய வீடுகள் கட்டித் தர கேட்டுக் கொண்ட தற்கு இணங்க, இப்பகுதி யில் வசிக்கும் 52 குடும்பங்க ளுக்கு புதிய வீடுகள் விரை வில் கட்டுவதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. மேலும், போதிய அளவு குடிநீர் கிடைத்திடும் வகை யில் கூடுதலாக சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கவும், கூடுதல் மின் விளக்குகள் அமைத்து கொடுக்க நக ராட்சி நிர்வாகம் மூலம் ஓரிரு நாட்களில் இப்பணிகள் நிறை வேற்றிக் கொடுக்கப்படும் என்றார். இப்பகுதி மக்கள் கேட் டுக் கொண்டதற்கு இணங்க வனத்துறையின் மூலம் குடி யிருப்புப் பகுதிகளில் பழுத டைந்த மரங்களை அப்புறப் படுத்த அறிவுறுத்தப்பட்டு ளது. இங்கு புதிதாக கட்டப் பட உள்ள குடியிருப்புப் பகு தியில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் அமைத்துக் கொடுக் கப்படும். இப்பகுதியில் உள்ள குழந்தைகள் மேல்நிலைப் படிப்பை தொடர நகராட்சி நிர்வாகம் மூலம் வாகன வச திகள் செய்திட ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந் தைகளுக்கு வழங்கி வந்த கலவை சாதத்தை சாப்பிட்டு பார்த்ததுடன், நாள்தோறும் தரமாகவும் சுவையாகவும் வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவு றுத்தினார்.</p>
