முந்தய பக்கம்

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்திடுக! தேனி மாவட்ட பேரவை கோரிக்கை

11 Oct 2026, 9:12 pm
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்திடுக! தேனி மாவட்ட பேரவை கோரிக்கை

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்திடுக!

தேனி மாவட்ட பேரவை கோரிக்கை

தேனி, அக்.11-சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர் சங்க தேனி மாவட்ட பேரவைக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

பேரவைக் கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வி.மோகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஆர்.வெங்கடபதி தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம், மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பிச்சைமணி, மாவட்ட பொருளாளர் எஸ்.வெண்மணி, டாஸ்மாக் மாவட்டச் செயலாளர் எம்.முத்துகணபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பேரவைக் கூட்டத்தில் மாவட்டத் தலைவராக எம்.செல்லப்பாண்டி, செயலாளராக வி.மோகன், பொருளாளராக எஸ்.சக்திவேல் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram