தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து மனை கோரி ஆட்சியரிடம் மனு

8 Jun 2026, 9:44 pm
பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து மனை கோரி ஆட்சியரிடம் மனு
<p><strong>பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து மனை கோரி ஆட்சியரிடம் மனு</strong></p><p>தேனி, ஜூன் 8- சின்னமனூரில் அரசால் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளி களுக்கு பட்டா வழங்கப்பட்ட நில த்தை உடனடியாக அளவீடு செய்து மனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் பயனாளிகள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சின்னமனூரில் பட்டியலின மக்க ளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சர்வே எண் 517/1-ல் உள்ள 1.96 ஏக்கர் நிலம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு, அதிகாரிகளின் துணையுடன் பட்டா மாற்றம் செய் யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், ஆதிதிராவிட மக்க ளும் இணைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக, கடந்த ஜன வரி 30 அன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உத்தமபாளை யம் கோட்டாட்சியர், 116 பயனாளி களில் முதல் கட்டமாக 77 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பட்டா வழங்கப்பட்ட பின்னர், நிலத்தை அளவீடு செய்து மனை ஒதுக்கீடு செய்யுமாறு வட்டாட்சியரி டம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக வும், அப்போது சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்த தாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிந்த பின்ன ரும், கடந்த மே 15 அன்று வட்டாட்சி யரை சந்தித்தபோது, மாவட்ட நிர்வா கத்திடம் இருந்து தனி அனுமதி பெற்றுவந்தால் மட்டுமே நிலத்தை அளவீடு செய்து வழங்க முடியும் என கூறி அதிகாரிகள் காலதாமதப் படுத்துவதாக பயனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, நீண்டகாலமாக காத்தி ருக்கும் 77 பட்டா பயனாளிகளுக்கும் வழங்கப்பட்ட நிலத்தை உடனடி யாக அளவீடு செய்து மனை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.