முந்தய பக்கம்

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தேனியில் 30,056 மாணவர்கள் பயன் பெறுவர்

22 Sept 2026, 9:25 pm
காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தேனியில் 30,056 மாணவர்கள் பயன் பெறுவர்

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தேனியில் 30,056 மாணவர்கள் பயன் பெறுவர்

தேனி, செப்.22-தேனி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம் 303 பள்ளிகளைச் சேர்ந்த 30,056 மாணவ, மாணவிகள் நாள்தோறும் பயனடைவார்கள் என மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

மேலச்சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் மாணவர் களுக்கு காலை உணவைப் பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, மகளிர் திட்ட இயக்குநர் வீராச்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுப்புராம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram