தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

10 Jul 2026, 9:04 pm
திருச்சி விரைவு செய்திகள்

பிறப்பு பதிய கால அவகாசம் நீடிப்பு தேனி மாவட்ட அதிகாரி தகவல்

தேனி, ஜூலை 10- 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம்பெற, அரசுப் பணிகளில் சேர, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்து குழந்தையின் பெயரினை தாமத கட்டணமின்றி பதிவுசெய்து கொள்ளலாம்.12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, உரிய அலுவலரின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெயரினை இதுவரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யாதோர் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து குழந்தையின் பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் தேனி ஆட்சியர் அழைப்பு

தேனி, ஜூலை10- தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 30.09.2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணைப்பிக்க தேனி ஆட்சியர் வைத்திநாதன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200-ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800-ம், மூன்று வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருந்தாலே போதுமானது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர், ஜூலை 10- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது சுந்தரமகாலிங்கம் திருக்கோவில். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு ஆனி மாத பிரதோசம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சாமி கும்பிடச் செல்ல ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் பாதுகாப்பாக மலை ஏறி தரிசனம் செய்வதற்கு வனத்துறையும், கோயில் நிர்வாகமும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

போலி நகையை அடகு வைத்தவர் மீது வழக்குப் பதிவு

தேனி, ஜூலை 10- போடியில் தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தில் போலி நகை அடகு வைத்து பண மோசடி செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தின் கிளை போடியில் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை மேலாளராக ஆஷ்மின் (50) என்பவர் இருந்து வருகிறார். தேனி அருகே போடேந்திரபுரத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகுராசா என்பவர் கடந்த 6.8.2025 முதல் 11.8.2025 ஆம் தேதி வரை மூன்று தவணைகளாக 85.88 கிராம் தங்க நகைகளை மேற்படி அடகு நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். இதற்கான தொகை ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 500 பெற்றுச் சென்றுள்ளார். நகையை சோதனை செய்து பார்த்தபோது அவை போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அழகுராசாவிடம் கேட்டபோது அவர் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 500 பணத்தை செலுத்திவிட்டார். மீதி பணம் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அடகு நிறுவனம் சார்பில் போடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்திரவின் பேரில் போடி நகர் காவல்துறையினர் அழகுராசா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கழிவு நீரேற்ற மையத்திலிருந்து விஷவாயு பரவல் பாறைப்பட்டியில் பொதுமக்கள் மறியல்

திண்டுக்கல், ஜுலை 10- திண்டுக்கல் பாறைப் பட்டி பகுதியில் கழிவுநீர் நீரேற்ற மையத்திலிருந்து வெளியேற்றிய போது விஷவாயு பரவியதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வத்தலகுண்டு சாலை யில் உள்ள பாறைப்பட்டியில் உள்ள கழிவு நீரேற்ற மையத்திலிருந்து வியா ழனன்று இரவு கழிவு நீர் வெளியேற்றிய போது, விஷவாயு பரவியதாகவும், இதனால் பாறைப்பட்டி, பிஸ்மி நகர், உள்ளிட்ட பகு திகளில் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நெஞ்சு எரிச்சல், கண்எரிச் சல் போன்ற உடல் உபாதை களும் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அப் பகுதி மக்கள் வெள்ளி யன்று காலை வத்தல குண்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்தை யடுத்து காவல்துறை அதிகா ரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அங்கு வந்து போராட்டக்காரர்க ளுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து விசாரணை செய்வ தாக வருவாயத்துறை அதி காரிகள் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

செங்கோட்டை காங்கிரஸ் தலைவர் படுகொலையில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி, ஜூலை 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன் புதூர் மணக்காடு தெருவைச் சேர்ந்தவர் ராஜ கோபால் (வயது 43) .செங் கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 12.08.2015 அன்று இரவில் அச்சன்புதூர் பகுதியில் நின்று கொண்டி ருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்திச் சென்றனர். .இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள முறிக் குளத் தின் கரையில் தலை துண்டி க்கப்பட்டு, உடல் தீயிட்ட நிலை யில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜகோ பாலை தலைவன் கோட்டை, அரண்மனை தெருவை சேர்ந்த கருத்த பாண்டி தேவர் என்பவரின் மகன் சாமிதுரை (வயது 59) சொக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (வயது 44) திரி கூடபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா தேவர் மகன் ராமர் (வயது 54) தலை வன் கோட்டை பரமசிவ தேவர் மகன் முத்துராஜ் என்ற ராஜ் (வயது 39) வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனிச் சாமி மகன் சுப்பையா பாண்டி யன் ஆகியோர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.இந்த வழக்கில் மேற்படி குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் கொலை செய்த தற்காக ஒரு ஆயுள் தண்டனை யும், ஆள் கடத்தலுக்காக ஒரு ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத் திற்காக ஐந்து வருட தண்ட னையும், கூட்டாக குற்றச் செயல் செய்ததற்காக இரண்டு வருடம் தண்டனையும் விதித்தார்.

திண்டுக்கல்லில் பெண்ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் எனக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்தவர் கைது

திண்டுக்கல், ஜுலை.10 திண்டுக்கல்லில் பெண்ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்து பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.7 லட்சம் கைப்பற்றினர். திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண்ணிடம் ஒரு மர்ம நபர் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை சென்னை காவல் அதிகாரி என்று கூறி,ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கி தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகவும், தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். உடனடியாக விடுவிக்க வேண்டும் எனில் ரூ.9 லட்சத்தை தான் சொல்லுகிற வங்கிக் கணக்கில் போட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பயந்து போன அந்த பெண் உடனடியாக ரூ.9 லட்சத்தை அந்த மர்ம நபர் சொன்ன வங்கிக்கணக்கிற்கு போட்டுள்ளார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் ஏ.டி.எஸ்.பி. தெய்வம் தலைமையில் கணினி தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை செய்தனர். அந்த மர்ம நபர் பெங்களுரூவில் உள்ள பர்தீன் அப்பாஸ் (20) என்று தெரியவந்தது.இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் பர்தீன் அப்பாஸை கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.7 லட்சத்தை மீட்டு பாதிக்ககப்பட்ட பெண்ணிடம் வழங்கியுள்ளனர். இதுதொடர்பபாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.