தேனி-2030 செயல் திட்டங்கள் கையேடு அரசின் 5 ஆண்டு சாதனை மலர் வெளியீடு
6 Mar 2026, 3:17 pm
<p><strong>தேனி-2030 செயல் திட்டங்கள் கையேடு அரசின் 5 ஆண்டு சாதனை மலர் வெளியீடு</strong></p>
<p>தேனி,மார்ச் 6- தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் தமிழகம் முழு வதும் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டார். இதில் தேனி மாவட்டத்தில் ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ் தொலைநோக்கு தேனி-2030 செயல் திட்டங்கள் குறித்த கையேடு மற்றும் தமிழ்நாடு அரசின் அனைவருக்கு மான ஆட்சி 5 ஆண்டே சாட்சி சாதனை மலரினை வெளி யிட்டார்கள். தேனி நாடாளுமன்ற உறுப்பி னர் தங்க தமிழ்செல்வன் , பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்டத்தின் வளர்ச்சி யில் ஒவ்வொருவரின் பங்களிப் பினை அளிக்கும் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியினை மையாகக் கொண்டு மக்கள் பிரதி நிதிகள், துறை சார்ந்த அலுவலர் கள், வல்லுநர்கள், பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனத்தார்கள் என பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஆக்கப்பூர்வமான கருத் துக்கள் அனைத்தும் தொகுத்து, தேனி மாவட்டத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நலனைத் திட்ட மிடும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ள தொலைநோக்கு தேனி - 2030 (Vision 2030) செயல் திட்டங் கள் குறித்த கையேட்டினையும், மேலும்,தமிழ்நாடு முதலமைச் சர் தலைமையிலான அரசு ஐந் தாண்டுகளில் (2021-2026) பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங் கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணி களின் விவரங்களை தொகுத்து தயாரிக்கப்பட்டுள்ள அனைவருக்கு மான ஆட்சி 5 ஆண்டே சாட்சி சாதனை மலரினை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வரு வாய் அலுவலர் ப.ராஜகுமார், திட்ட இயக்குநர்கள் தமிழரசி (ஊரக வளர்ச்சி), சந்திரா (மகளிர் திட்டம்), கூடலூர் நகர்மன்றத் தலைவர் பத்மா வதி லோகந்துரை, தேனி-அல்லி நகரம் நகர்மன்ற துணைத்தலை வர் செல்வம், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் மிதுன்சக்கரவர்த்தி (பழனிசெட்டிபட்டி), கீதாசசி (வீர பாண்டி), தகவியரசு (பூதிப்புரம்), நடேசன் (வடுகபட்டி), பால்பாண்டி (தாமரைக்குளம்), நாகராஜ்(தென் கரை),முருகன் (மார்க்கையன் கோட்டை),சுந்தரி (க.புதுப்பட்டி), இலட்சுமி (பண்ணைப்புரம்), லெட்சுமி (தேவாரம்) மற்றும் வட்டாட்சியர் கள், வட்டார வளர்ச்சி அலுவலர் கள், செயல் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
