முந்தய பக்கம்

சிபிஎம் - மக்களின் தொடர் போராட்டத்தால் தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை மூடல்

10 Jul 2026, 9:01 pm
சிபிஎம் - மக்களின் தொடர் போராட்டத்தால் தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை மூடல்
<p><strong>சிபிஎம் - மக்களின் தொடர் போராட்டத்தால் தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை மூடல்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 10- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்தின் போது, இந்த மதுக்க டையை 10 நாட்களில் மூடுவதாக டாஸ்மாக் அதிகாரி உறுதி அளித்தார். ஆனால் கூறியபடி கடையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் பொதுமக்கள் கடந்த 4-ஆம் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் அதிகாரி குமாரவேல், 3 நாட்களில் கடையை மூடுவதாக உறுதி அளித்தார். அதே சமயத்தில் மூட நடவடிக்கை எடுக்கப்பட வில்லையென்றால் வருகிற 14 ஆம் தேதி மதுக்க டைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி டாஸ்மாக் கடை நிரந்தரமாக ஜூலை 8 புதனன்று மூடப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram