முந்தய பக்கம்

தீப்பொறிகள்... - முத்தையா மோகன்

11 Jul 2026, 9:08 pm
தீப்பொறிகள்... - முத்தையா மோகன்
<p><strong>தீப்பொறிகள்... - முத்தையா மோகன்</strong></p><p>புலனப் பகிரி வழியாகப் புதிது புதிதாய்ப் பொய் மூட்டைகள்! பக்கம் பக்கமான திரித்தலில் பக்குவங்களற்ற பரிமாறல்கள். தன்னை முன்னிறுத்திக் கொள்ள முன்னையதை மறந்து போதல்; படவரியைத் தொட்டுவிட்டாலோ பதைபதைக்கிறது நெஞ்சங்கள்! இட்டுக்கட்டும் செய்திகளோடு இளசுகளின் திசைதிருப்பல்; எது ஒன்றையும் சிந்திக்காமல் சந்தியில் நிற்கும் கதைகள். முகநூல் என்றொரு பகுதி கருத்தாடல்களின் முனகல்கள்; எது எப்படி வந்தாலும் அதை அப்படியே சுவீகரித்து, வரலாறுகளை உணராமல் வகை வகையாய்ப் பரிமாற்றம்! மாற்றங்கள் தேவையெனக் கூறும் ஆற்றாமைகளின் தேராமைகள் வர்க்கங்களின் பாதையிலிருந்து தற்காலத்தால் வந்தவைகளைக் குதர்க்கங்களால் குழப்புகிறது, சிந்திக்க மறந்து போன... சீர்கெட்ட வருங்காலங்கள் ஆதரித்து நிற்பதெல்லாம், வேற்றுச் சூழ்ச்சிகளின் நாடகமாம் எங்களாதரவில் ஒளிந்திருக்கிறது! நாட்டைக் காக்கும் பொதுநலம் பொறுத்திருந்து பார்ப்பீர் மக்கா, செங்கதிரின் தீப்பொறிகளை சிந்தனையின் வீச்சுகளாக...!</p>
Share
FacebookXWhatsAppTelegram