தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

28 Sept 2026, 9:51 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

தீக்கதிர் உலக செய்திகள்

பிரிக்ஸ் ஃபேஷன் மாநாடு : ரஷ்யாவில் துவங்கியது

60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஃபேஷன் துறை நிபுணர்களை ஒருங்கிணைக்கும் 4 ஆவது ‘பிரிக்ஸ்+ ஃபேஷன் மாநாடு’ செப்டம்பர் 28 அன்று ரஷ்யாவில் துவங்கியது. ஆடை வடிவமைப்பு, தொழில்நுட்பம், சில்லறை வணிகம் என உலகளாவிய ஃபேஷன் துறையின் எதிர்காலம்குறித்து மூன்று நாட்களுக்கு இந்த மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளன. மின்-வர்த்தக தளங்கள், செயற்கை நுண்ணறிவு, அணியக்கூடிய தொழில்நுட்பங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசியத்தை வெளியிட்ட ஜெலன்ஸ்கி : மன்னிப்பு கேட்க வேண்டும் - தென்கொரியா

ரஷ்யா உடனான போரில் இரண்டு வடகொரியா ராணுவ வீரர்களை கைது செய்து அவர்களை தென்கொரியாவிற்கு அனுப்பிய ரகசியத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஐ.நா அவையில் உளறிவிட்டார். முக்கியமான ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக ஜெலன்ஸிக்கு தென்கொரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் அரசு தவறை மறைக்க முயல்கிறது. அச்செயலுக்கு அவர்கள் அதிகாரப்பூர்வ விளக்கமும் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் தென்கொரியா வலியுறுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளை பாதுகாக்க : ஆசிரியர்கள் போராட்டம்

அரசுப் பள்ளிகளுக்குக் கூடுதல் நிதி மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டில் ஆசிரியர்கள் அக்டோபர் 14 அன்று காலவரையற்ற காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்க உள்ளனர். இதற்கு முன்னதாக பொதுக் கல்வியை அரசு பாதுகாக்க வேண்டும்; மதச்சார்பின்மையை உறுதி செய்ய வேண்டும்; கல்வித் துறைக்கான நிதியை வெட்டாமல் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; என வலியுறுத்தி செப்.27 அன்று அந்நாட்டு தலைநகர் மாட்ரிட் இல் 10,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பேரணி நடத்தினர்.

எபோலா தொற்று : 8000 த்தை கடந்தது

காங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000-ஐத் தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 4,000-ஐ நெருங்கிக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26 வரையிலான தரவுகளின்படி, நாட்டில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,067 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், இந்நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை 3,901 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எபோலா பாதிப்பின் இறப்பு விகிதம் 48.4 சதவிகிதமாக உள்ளது. இதுவரை 2,070 பேர் மட்டுமே தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

தாய்லாந்தில் கனமழை வெள்ளம் : 8 பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த வார இறுதியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாட்டின் கிழக்கு மாகாணத்தில் நீர்நிலைகள் நிரம்பி வழிவதால், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது என அங்கிருந்து மக்களை வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 320 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இது வழக்கமாக செப்டம்பர் மாதம் முழுவதற்கும் பெய்யக்கூடிய ஒட்டுமொத்த மழைப்பொழிவுக்கு இணையானதாகும்.

‘தோல்வியைடைந்தது நீங்கள் தான்!’ டிரம்ப் பேச்சுக்கு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நியூயார்க், செப்.28 -ஐ.நா. அவையில் செப்.22 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிகழ்த்திய உரைக்கு அமெரிக்ககம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐ.நா. பொது அவை அவையில் 38 நிமிடங்கள் உரையாற்றிய டிரம்ப், தனது தலைமையின் கீழ் அமெரிக்கா ஒரு “பொற்காலத்திற்குள்” நுழைந்துள்ளதாக சுய தம்பட்டம் அடித்தார். பிற நாடுகளின் இறையாண்மை குறித்துப் பேசிய அவர், வெனிசுலா மீதுநடத்திய தாக்குதல், ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத்திச் சென்றது, அந்நாட்டின் எண்ணெய்வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் கொள்ளையடிக்க திறந்துவிட்டது, வெனிசுலா உள்ளிட்ட கரீபியன் கடல்பகுதியில் படகுகள் மீது தாக்குதல் நடத்தி பொதுமக்கள் உள்ளிட்டு 234 பேரை படுகொலை செய்தது ஆகியவற்றை நியாயப்படுத்தினார்.

மேலும், கியூபாவை ஒரு தோல்வியடைந்த நாடு என்று அவமதித்த டிரம்ப், “கியூப கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துவருகிறது; அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (CPUSA), அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் ஆண்டிஃபா (Antifa)ஆகிய அமைப்புகள் கியூபாவால் இயக்கப்படும் ஒரு சதி வலைப்பின்னலின் கீழ் செயல்படுகின்றன” என அவதூறு பரப்பினர்.

வெளிநடப்பு

டிரம்ப்பின் இந்த மோசமான உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கியூப நாட்டின் பிரதிநிதிகள் ஐ.நா அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர். உரையின் முடிவில், “கம்யூனிசம்ஒருபோதும் அமெரிக்காவிற்கு வராது, ஆனால் கியூபாவிற்கு சுதந்திரம் வரும்” என்று கூறி கியூபாவில் ஆட்சிககவிழ்ப்பை நடத்தும் தனது சதித்திட்டத்தையும் மறைமுகமாக வெளிப் படுத்தினார். டிரம்ப்பின் இந்த அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலுமாக நிராகரித்து வன்மையாக கண்டித்துள்ளது.“டிரம்ப் சொல்வது முற்றிலும் ஆதாரமற்ற, அப்பட்டமான கற்பனைக் கதை.எங்கள் கட்சியின் கொள்கைகளும் முடிவுகளும் முற்றிலும் அமெரிக்கா விலேயே எடுக்கப்படுகின்றன.கியூபாவுடனான எங்கள் உறவு மிகவும் வெளிப்படையானது. கியூப மக்களுடன் நட்புறவு கொள்ள எங்களுக்கு முழுஉரிமை உண்டு. அதேபோல அந்நிய நாடுகளின் தலையீடு இன்றி வாழ கியூப மக்களுக்கும் உரிமை உண்டு.கியூபாவைத் தோல்வியடைந்த நாடு என்று டிரம்ப் கூறுகிறார். ஆனால், கியூப மக்களைப் பட்டினி போட்டுப் பணியவைக்க முயலும் அமெரிக்காவின் இரக்கமற்ற கொள்கைதான் தோற்றுப் போயுள்ளது. நாங்கள் ரகசியமாகச் சதித்திட்டங்களைத் தீட்டுவதில்லை, மக்களை அமைப்பாக்குகிறோம். டிரம்ப் அவர்களே, நீங்கள் மிகவும் தாமதமாகபேசுகிறீர்கள். நாங்கள் கடந்த 107 ஆண்டுகளாக அமெரிக்காவில் இயங்கி வருகிறோம். இனிமேலும் இங்கிருந்துஎங்கும் போகமாட்டோம்” என்று அக்கட்சியின் தலைவர்கள் டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.