தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 Sept 2026, 9:53 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன்

பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பு, பயண ஏற்பாடுகளை உறுதி செய்ய ஒன்றிய அரசும் கேரள அரசும் தலையிட வேண்டும்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற ஈஷா

கடந்த சில நாட்களாகவே எனக்கு மன அழுத்தம் அதிகரித்து வந்தது. பதற்றத்தில் இருக்கும்போது தசைநார்கள் செயல்படும் விதம் வேறுபட்டது. போட்டிக்கு முன்பு எனது மன அழுத்தத்தை உணர்ந்த அம்மா, “பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய் தூங்கு” என்று கூறினார். ஆனாலும் கடுமையான சிரமத்துடன் போராடி நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளேன்.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் மட்டுமே தனித்து எடுக்கும் முடிவு, நிச்சயமாகத் தேர்தல் ஆணையத்தின் முடிவாகாது. பொறுத்தது போதும். இதைக் கண்டித்து எதிர்க்கவும், ஜனநாயக இந்தியா பிழைத்திருப்பது மட்டுமின்றி, வளமுடனும் செழிப்புடனும் மிளிர்வதை உறுதிசெய்யவும் இளைஞர்களும், ஒட்டுமொத்த தேசமும், ஒன்றிணைய வேண்டும்.

இந்திய ஜனநாயக அதிகார மையம்

தேர்தல் முறைகேட்டில் ஞானேஷ் குமார் ஒன்றிய மோடி அரசின் பின்னால் பதுங்கிக்கொள்ளலாம். மோடி அரசோ உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் பின்னால் பதுங்கிக்கொள்ளலாம். ஆனால் தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றம் என எந்த அதிகார அமைப்பும் மக்களிடம் சாக்குப்போக்கு சொல்லிப் பதுங்க முடியாது.