தீக்கதிர் முக்கிய செய்திகள்
3 Nov 2026, 10:54 pm

கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன்

கேரள கடலோரப் பகுதியை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க யுடிஎப் (காங்கிரஸ் கூட்டணி) அரசு முயல்கிறது. இது மீனவர்களுக்குச் செய்யப்படும் கொடூரமாகும். யுடிஎப் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நவதாராளமயமாக்கல் நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கலையும் திணித்து, மாநிலத்தின் தனித்துவத்தைச் சீரழிக்க முயல்கிறது.

ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்

எஸ்ஐஆர் பணியின் மூலம் நாடு முழுவதும் 3 கோடி வங்கதேச ஊடுருவல்காரர்கள் (முஸ்லிம் மக்கள்) நீக்கப்பட்டுள்ளனர் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால் பாஜக ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 1.27 கோடி இந்து வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன? இது ஏன்?

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

பீகார் மாநிலம் மதுபானியில் காவல்துறை உதவி ஆய்வாளர் சந்திர

மோகன் சிங், அசோக் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். குடும்ப உறுப்பினர்கள் தடுத்தபோது, சந்திரமோகன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் அசோக் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மக்களை காப்பாற்றுவதே காவல்துறையின் கடமை. ஆனால் பாஜக ஆளும் பீகாரில் காவல்துறையிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் போலும்.

சிபிஎம் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பி. ராஜேஷ்

கேரள காங்கிரஸ் அரசின் மதுபான துறையை கவனிக்கும் அமைச்சர் லிஜூ கடந்த 6 மாதங்களில் எனது துறையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.அப்படியென்றால் ஊழல் நடைபெற்றது என்று அர்த்தம்.