தீக்கதிர் முக்கிய செய்திகள்
15 Jul 2026, 9:01 pm

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

‘வாக்காளர் பதிவு விதிகள் 1960’-இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட படிவம் 6இல் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை. ஆனால் விண்ணப்பதாரர்கள் தங்களோ அல்லது அவர்களது பெற்றோரோ, தாத்தா-பாட்டிமார்களோ கடந்த எஸ்ஐஆர் போது வாக்காளர் பட்டியலில் இருந்தார்களா என்பதைக் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோருவது சட்டவிரோதமானது.

அல் ஜஸீரா ஊடகம்

சர்வதேச கால்பந்து உலகில் முக்கிய மாற்றமாக, நார்வே கால்பந்து சம்மேளனம் பிபா மற்றும் யுஇஎப்ஏ போட்டிகளிலிருந்து இஸ்ரேலை இடைநீக்கம் செய்யத் தீவிரமாக இறங்கியுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளின் போது, சர்வதேச கால்பந்து அமைப்புகளின் விதிகள் மீறப்பட்டதாகவும் நார்வே கால்பந்து சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு தலைவரை ‘பப்பு (ராகுல் காந்தி)’ என்று அழைக்கிறார்கள். அதே சமயம் 4ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத ஒருவரை ‘விஸ்வகுரு (பிரதமர் மோடி)’ என்று அழைக்கிறார்கள். இப்படி ஒரு நாட்டில் நான் வாழ்கிறேன்.

உச்சநீதிமன்றம்

மார்பகங்களை தொடுவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி அல்ல என்ற பாட்னா உயர்நீதிமன்றத்தின் (பீகார்) கருத்து மிக மோசமானது. பாலியல் வழக்குகளை கையாளும் நீதிபதிகள் தேசிய நீதித்துறை அகாடமி தயாரித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.