தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

30 Sept 2026, 10:58 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழக வீரர்களுக்கு உதயநிதி பாராட்டு

சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வரும் தமிழக வீரர் - வீராங்கனைகளுக்கு, விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும்,எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துஉள்ளார்.

ஜப்பானின் ஐச்சி – நகோயாவில் நடைபெறும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கை எட்டிப் புதிய சாதனை படைத்த வித்யா ராமராஜுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்த வித்யா, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும், அவருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை‌ மூலம் உதவிகள்வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.அபிநயா, விஷால், ராஜேஷ் ரமேஷ், அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், பரணிகா, ஹரிஹரன், காமலினி ஆகியோருக்கும் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரகுபதி வெற்றிக்கு எதிரானதேர்தல் வழக்கு தள்ளுபடி

சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, தவெக வேட்பாளர் சிந்தாமணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ரகுபதி தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்று, சிந்தாமணியின்வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே, தொகுதி வாக்காளர் பொன். பன்னீர்செல்வம் தொடர்ந்தவழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘ஜெம்’ வீரமணி மீது 3 வழக்குகள் பதிவு

சென்னை: ‘ஜெம்’ கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுமியர்க்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் முதல் வழக்கு பதியப்பட்டது. 2004ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் தற்கொலை தொடர்பாக, அவரது தாய் அளித்த புகாரின் அடிப்படையில்இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது, மற்றொரு சிறுமியையும், பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாக ஒரு போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது.விசாரணை அதிகாரி விலகல்!வீரமணி மீதான போக்சோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவிலிருந்து (எஸ்.ஐ.டி.) தம்மை விடுவிக்குமாறு, குழுவில் உள்ள அதிகாரி தேன்மொழி சென்னை பெருநகர காவல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலிதலைமையிலான குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார். விலகல் கோரிக்கைக்கான காரணம் குறித்த விவரம் தெரியவில்லை.

போலி மருந்து மோசடி: 7-ஆவது நபர் கைது!

சென்னை: கர்நாடகத்தில் நடந்த போலி மருந்து உற்பத்தி, விநியோக மோசடி தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, 7-ஆவது நபராக பாலசுப்பிரமணியன் என்பவரைச் சென்னையில் கைது செய்துள்ளது.

முக்கியக் குற்றவாளி பிரசாந்திடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடந்துள்ளது. பாலசுப்பிரமணியன் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். போலி மருந்துகளை விநியோகிக்க உருவாக்கப்பட்ட போலி நிறுவனத்தின் இயக்குநராக அவர் செயல்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; ஆனால் அவரது அதிகாரப்பூர்வ பங்கை போலீசார் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. இந்த வலையமைப்பில் மேலும் பலர் தொடர்புடையிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சிகள் தொடர்கின்றன.

தீண்டாமை ஒழிப்பு, பஞ்சமி நில மீட்புக்காக தமிழகம் முழுவதும் நேரடி இயக்கங்கள்!

சென்னை, செப். 30 -செப்.30 அன்று தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு, பஞ்சமி நில மீட்புபட்டியலின மக்களுக்குக் குடிமனைப் பட்டா, பொது மயானம்,சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், முற்றுகை, காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற இப்போராட்டங்கள் பல்வேறு இடங்களில் வெற்றியைப் பெற்றது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் “பரச்சேரி” பெயரை “வடக்கு அச்சம் தவிர்த்தான்” என மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பணிக்கம்பாளையத்தில் 27 தோராயப் பட்டாக்களை தனிப்பட்டாவாக மாற்றவும், கருமாண்டி செல்லிபாளையம் மயான வகைப்பாடுமாற்றவும் நடவடிக்கை உறுதியளிக்கப்பட்டது. சீனாபுரம் மயானப் பாதை, ஆக்கிரமிப்பு அகற்றம், எலீஸ் பேட்டை அடிப்படை வசதிகள் குறித்தும் நடவடிக்கை உறுதியானது; அந்தியூரில் தெருவிளக்கு சீரமைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் குலமங்கலத்தில் 132 குடும்பங்களுக்கு 10.10.2026 அன்று நிலம் அளந்து பட்டா வழங்க உறுதியளிக்கப்பட்டது. கோயம்புத்தூர் இருகூரில் 160 குடும்பங்களுக்கு இ-பட்டா வழங்கநடவடிக்கை உறுதி செய்யப்பட்டது; தர்மபுரி கீழானூரில் பட்டா கோரி போராட்டம் நடைபெற்றது.கரூர் மாவட்டம் மலச்சிபுதூரில் 50 ஆண்டுகளாக வசிக்கும் அருந்ததியர் வீடுகளை இடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. புதுக்கோட்டை பாக்குடியில் 44 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உறுதிஅளிக்கப்பட்டதுடன், கோவில் நிலம் மீட்பும் கோரப்பட்டது.

தேனி மாவட்டம் கோம்பையில் சர்வே எண்கள் 888/1, 888/2, 888/3 பஞ்சமி நிலத்தை

வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. நில வகைமாற்றத்தை ரத்து செய்தல், நீதிபதி

குடியிருப்பு திட்டத்தை கைவிடுதல், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குதல் குறித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.