தீக்கதிர் முக்கிய செய்திகள்
1 Oct 2026, 11:04 pm

சத்தியபாமா அழுதது, ஏற்கெனவே எழுதப்பட்ட கதை வசனத்தின் படி நடந்த நாடகம் என்றும், மேடையில் இருந்த அமைச்சர் ராஜ்மோகன், காதில் ஏதோ கூறிய பிறகே சத்தியபாமா அழுகையை அரங்கேற்றினார் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்

கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த விமர்சனங் களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதி

லளித்துள்ளார். “8 மணி நேரத்துக்கும் மேலாக மக்களும்

முதலமைச்சரும் காத்திருந்தனர். அதனால் விரைவாகப் பேசி முடிக்குமாறு மட்டுமே சத்தியபாமாவிடம் கூறினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘டெட்’ சிறப்புத் தேர்வு: முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை, அக். 1 -அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முடிவுகளை வெளியிடுவதற்கு விதிக்கப்

பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீதிபதி மும்மி

னேனி சுதீர் குமார் அமர்வு நீக்கியுள்ளது. மேலும், கருணை

மதிப்பெண் கோரும் பிரதான வழக்கை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ரூ. 100 கோடி முறைகேடு?அமலாக்கத்துறை விசாரணை

சென்னை, அக். 1 -தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி மோசடி நடந்ததாக, சென்னை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக திமுக பிரமுகர்பி.டி. அரசகுமாரும், அவரது உறவினர்கள் 3 பேரும்கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை யும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

குடும்ப உறுப்பினரைக் கைது செய்ய முடியாது!உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை, அக். 1 -குற்றம் சாட்டப்பட்டவரைச் சரணடையச் செய்வதற்காக அவரது குடும்ப உறுப்பினரைக் கைது செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள் ளது. மாறாக, குடும்ப உறுப்பினர் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகையைச் சம்பந்தப்பட்ட போலீசாரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யலாம் என்றும்,ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், திவேஷ் சந்திரா அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

வணிக சிலிண்டர் விலை உயர்வு

சென்னை, அக். 1 -சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி,வணிகப் பயன்பாட்டுக் கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சிலிண்டருக்கு 66 ரூபாய் 50 காசுகள் உயர்த்தியுள்ளன.

பருவமழை இயல்பாக இருக்க வாய்ப்பு!

சென்னை, அக். 1 -அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்,கேரளம், கடலோர ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகம்உள்ளிட்ட தென்னிந்தி யப் பகுதிகளில் மழை இயல்பான அளவில் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆம்னி பேருந்து, பயண முகவர் சங்கம் ஒப்பந்தம்!

சென்னை, அக். 1-அனைத்து ஆம்னி பேருந்து உரிமையா ளர்கள் சங்கம், மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் இடையே வியாழனன்று (அக். 1)புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்சாரப் பேருந்துகள், சார்ஜிங் கட்டமைப்பு, வாகனப் பராமரிப்பு, டிஜிட்டல் முன்பதிவு, பயணிகள் பாதுகாப்பு, ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் ணியாளர் பயிற்சி ஆகியதுறைகளில் அனு பவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்வது இதன் நோக்கமாகும்.

டெங்கு : 2 மடங்கு அதிகரிப்பு!

சென்னை, அக். 1 -சென்னையில் ஆகஸ்ட் மாதம் சென்னையில் 605 பேருக்கு டெங்குஉறுதி செய்யப்பட்ட நிலையில், செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30 அன்று ஒரே நாளில்72 பேருக்குப் புதிதாகபாதிப்பு கண்டறியப் பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘பாலர் பூங்கா’ மாநில மாநாடு கன்னியாகுமரியில் இன்று துவங்குகிறது

நாகர்கோவில், அக. 1 -அறிவியல் மனப்பான்மையுடன் குழந்தைகளை வழிநடத்தும் ‘பாலர் பூங்கா’ மாநில மாநாடு, கன்னியாகுமரியில் இன்று (அக்.2) துவங்குகிறது. காந்தி மண்டபத்தில் காலை 9 மணிக்கு அண்ணல் காந்தியாரின் முகக்கவசம் அணிந்து சிறுவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதனைத்தொடர்ந்து, சிஎஸ்ஐ மைய அரங்கில் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது.மாநாட்டை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் துவக்கி வைக்கிறார். மாநில ஒருங்கிணைப்பா ளர் என். அமிர்தம், கேரள மாநில பாலர்சங்க கருத்தாளர் பி.டி. ராஹேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி, எஸ். வாலண்டினா, சி. சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க குமரி மாவட்டச் செயலாளர் ஜெனித்தின் ‘அறிவியல் அதிசயங்கள்’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.